|
மகான் ஒருவரிடம் வந்த அடியவர், சுவாமி! நான் மனதார எந்தத் தவறும் செய்வதில்லை. பிறருக்கு எந்தத் கெடுதியும் நினைப்பதில்லை. எனது மனது தூய்மையாக உள்ளது. எனக்கு உபதேசம் தேவையா? என்று கேட்டார். அதற்கு மகான், மகனே! நீ எந்த வேலையும் செய்யாமல் அமைதியாக ஒரே இடத்தில் இரண்டு நாட்கள் உட்கார்ந்து இரு. அதன்பின் என்னிடம் வா. உபதேசம் தேவையா, வேண்டாமா என்று தெரிந்துவிடும் என்றார். மகான் சொன்னபடி இரண்டு நாட்கள் வேலை எதுவும் செய்யாமல் ஒரு மரத்தடியில் உட்கார்ந்து விட்டு வந்தார் அந்த அடியவர். அவரைக் கண்ட மகான், மகனே! உன் ஆடைகளில் என்ன இவ்வளவு தூசு படிந்துள்ளது? உன் முகத்திலும் அழுக்குப் படித்து கிடப்பதைப் பார். எந்த வேலையும் செய்யாமல் ஒரே இடத்தில் உட்கார்ந்து இருக்கும் போதே உன் மேல் இவ்வளவு மாசு படிந்திருக்கும் போது மனசிலும் அப்படித்தான் அழுக்கு படிந்துவிடும். அதற்கு நல்ல எண்ணங்களை மனத்துக்குள் எப்போதும் நிரப்பிக்கொண்டே இருக்க வேண்டும். அதற்குத்தான் இங்கு உபதேசம் தந்து கொண்டிருக்கிறேன் என்றார். மகான் சொன்னதைக் கேட்டு மனத்தெளிவு பெற்றான், சீடன். |
|
|
|