|
ஒரு குருவும், சீடரும் மலர் தோட்டத்தில் நுழைந்தனர். அங்கு பல சிட்டுக்குருவிகள் பறந்து கொண்டிருந்தன. அதில் ஒன்றையாவது பிடித்து குருவிடம் கொடுத்தால் அவர் சந்தோஷப்படுவார் என நினைத்த சீடன், அவற்றை விரட்டி விரட்டி பிடிக்க முயன்றான். ஆனால் ஒன்று கூட சிக்கவில்லை. சோர்ந்து போன அவனிடம், “சரி விடு...இந்த தோட்டத்திற்குள் இன்னும் சிறிது துõரம் சென்று அதன் அழகை ரசிப்போம்,” என்றார் குரு. அதன்படி இருவரும் தோட்டத்திற்குள் இன்னும் சிறிது துõரம் நடந்தனர். அமைதியாக மலர்ச்செடிகளை ரசித்துக் கொண்டிருந்தனர். அப்போது சில குருவிகள் தானாகவே குருவின் கையில் வந்து அமர்ந்தன. சீடனுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. அவனிடம் குரு,“பார்த்தாயா! மகிழ்ச்சி என்பது நாம் தேடிப்போனாலும் கிடைக்காத விஷயம். மனதில் எவன் ஒருவன் அமைதியை வளர்த்துக் கொள்கிறானோ, அவனைத் தேடி அது வரும். எனவே மகிழ்ச்சியை துரத்திப் பிடிக்க நினைக்காதே. அது தானாக வரும் போது வரட்டும்,” என்று அறிவுரை சொன்னார். |
|
|
|