Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » எளிமை தெய்வம்!
 
பக்தி கதைகள்
எளிமை தெய்வம்!

அகங்காரம் கொண்ட பக்தியை விட, அன்புள்ளம் கொண்ட எளியவர்களின் பக்திக்கே இறைவன், இரங்கி அருள்வான். குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில், உபன்யாசம் செய்து கொண்டிருந்தார், அக்கோவில் அர்ச்சகர். அதை, ஏராளமானோர் கேட்டபடி இருக்க, சுவாமி தரிசனத்திற்காக வந்திருந்த பூந்தானம் என்ற பக்தர், அதைக் கேட்டு, அப்படியே மெய் மறந்து நின்றார். நிகழ்ச்சி முடிந்து வெளி வந்த அர்ச்சகர், பூந்தானத்தை பார்த்து நலம் விசாரித்தார். அவருடைய பேச்சில் ஞானம், பக்தியை விட, ஏளனமும், கர்வமும் தலைதூக்கி இருந்தன. அதை புரிந்து கொள்ளாத பூந்தானம், ’உத்தமரே... அவ்வப்போது நானும் கண்ணனை தியானம் செய்கிறேன்; இருப்பினும், கண்ணனின் முழு வடிவத்தை தியானிக்க முடியாமல் சிரமப்படுகிறேன். நல்லதொரு வழியை காட்டுங்கள்...’ என, பணிவோடு வேண்டினார். அவருடைய அப்பாவித்தனம், அர்ச்சகரின் வித்யா கர்வத்தை தூண்ட, ’பூந்தானம்... நீ அந்த பரந்தாமனின் பக்தன் தானே... அவனை எருமை மாடு வடிவத்தில் கூட தியானிக்கலாமே...’ என, விளையாட்டாக கூறினார்.

அதை, அப்படியே நம்பி, கண்ணனை எருமை மாடு வடிவத்திலேயே தியானிக்க துவங்கினார், பூந்தானம். அவருடைய தீவிரமான தியானத்தால், அவருக்கு, எருமை மாடு வடிவத்திலேயே காட்சி கொடுத்தார், கண்ணன். ஒருநாள், குருவாயூர் கோவில் உற்சவத்தின் போது, உற்சவரை வெளியே கொண்டு வர முயன்றனர்; முடியவில்லை. படிக்கட்டில் ஏதோ இடிப்பதை போல இருந்தது. ஆனால், கண்களுக்கு எதுவும் தெரியவில்லை. அப்போது, சற்று தூரத்தில் இருந்த பூந்தானத்தின் கண்களுக்கு, உற்சவ மூர்த்தி, எருமை மாடு வடிவத்தில் காட்சியளித்தார். அம்மகிஷத்தின் கொம்பு இடிப்பதாலேயே உற்சவர் வெளிவர முடியவில்லை என்பது, பூந்தானத்திற்கு புரிந்தது. அவர் உடனே, ’சற்று வலது கை புறமாக சாய்த்து எடுங்கள்; அங்கு தான் கொம்பு இடிக்கிறது. அதனால் தான், சுவாமியால் வெளி வர முடியவில்லை...’ என்றார்.
அவர் சொல்வது புரியாவிட்டாலும், அப்படியே செயல்பட்டனர்; உற்சவர் வெளியே வந்து விட்டார். அதேசமயம், கர்ப்பகிரகத்தில் சுவாமிக்கு பூஜை செய்து கொண்டிருந்த அர்ச்சருக்கு, இறைவன், எருமை மாடு வடிவில் காட்சியளித்து, ’என் பக்தனான பூந்தானம், இவ்வடிவில் தான், என்னை தியானித்து வருகிறான்...’ என, விவரித்தார். அர்ச்சகருக்கு, கண்ணனின் கருணையும், அக்கருணைக்கு பாத்திரமான பூந்தானத்தின் தூய்மையான பக்தியும் புரிந்தது. வேகமாக வெளியில் வந்து, பூந்தானத்தின் திருவடிகளில் விழுந்து, ஆனந்தக் கண்ணீர் வடித்தார். அப்போதுதான், மற்றவர்களுக்கு, பூந்தானம் ஏன் கொம்பு இடிக்கிறது என்று கூறினார் என்பதன் காரணம் புரிந்தது. தூய்மையான பக்தி, தெய்வத்தையும் அசைக்கும்!


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar