Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » லட்சுமியால் பிறந்த பாரதம்!
 
பக்தி கதைகள்
லட்சுமியால் பிறந்த பாரதம்!

கண்வ மகரிஷியின் ஆஸ்ரமத்தில், அவரது வளர்ப்பு மகள் சகுந்தலை பூப்பந்து விளையாடிக் கொண்டிருந்தாள். அந்தப்பக்கமாக வேட்டைக்கு வந்த துஷ்யந்தன் என்ற மன்னன், அவளைக் கண்டு காதல் கொண்டான். இருவருக்கும் காந்தர்வ திருமணம் நடந்தது. ஒருநாள் சகுந்தலை, தன்னை மறந்து துஷ்யந்தனை நினைத்துக் கொண்டிருந்த போது, துர்வாச முனிவர் அங்கு வந்தார். துஷ்யந்தனின் நினைவில் இருந்த சகுந்தலை அவரை கண்டுகொள்ளவில்லை. உடனே துர்வாசர் கோபமடைந்து, துஷ்யந்தன் அவளை மறந்து போக வேண்டும் என சாபம் அளித்தார். துஷ்யந்தனும் கர்ப்பமாய் இருந்த அவளை மறந்து பார்க்கவே வரவில்லை. அவளுக்கு பிறந்த குழந்தைக்கு ‘பரதன்’ என்று பெயரிட்டாள். பரதன் காட்டிலுள்ள சிங்க குட்டிகளுடன் பயமின்றி விளையாடினான். சகுந்தலை மனம் மகிழ்ந்தாள். அப்போது துர்வாசரின் சாபம் நீங்கி கணவருடன் இணைந்தாள். தாயும், மகனும் துஷ்யந்தனின் அரண்மனையில் ராஜ வாழ்வைத் தொடங்கினர். பரதனின் துணிச்சல் கண்ட துஷ்யந்தனும் மகனைப் பாராட்டினான். அப்போது “துஷ்யந்தா! உன் மகன் பரதன் லட்சுமி தேவியின் அருள் பெற்றவன். எதிர்காலத்தில் பெரும் சக்கரவர்த்தியாக விளங்கப் போகும் இவன் பெயரால், இந்த புண்ணிய பூமி ‘பரத கண்டம்’ (பாரதம்)என்று வழங்கப்படும்” என்று வானில் அசரீரி ஒலித்தது. லட்சுமியின் அருள் பெற்ற ஒருவனால் தான் இந்த தேசமே பாரதம் என அழைக்கப்படுகிறது.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar