|
விவேகானந்தருக்கு பிராணிகளிடம் அபரிமிதமான அன்பு உண்டு. அவர், ஹன்ஸ், மத்ரு என்ற பெயரில், இரண்டு ஆட்டுக் குட்டிகளை வளர்த்தார்.அவற்றில் மத்ரு,சுவாமியை விட்டுப் பிரியவேபிரியாது. சுவாமிஜியும் அந்த ஆட்டுக்குட்டியிடம் மிகுந்த அன்பு வைத்திருந்தார்.அதன் கழுத்தில் சிறு மணிகளைக் கோத்துக் கட்டுவார். அது துள்ளி விளையாடும்போது எழும் ஓசையில் பரவசம் அடைவார். அதைக் குளிப்பாட்டுவது,உணவு ஊட்டுவது, விளையாடுவது என்று ஒரு குழந்தையைப் போல பராமரித்து வந்தார்.சுவாமியைப் பார்க்க, அவரது அறையின் வெளியே பலர்காத்திருப்பார்கள். ஆனால், மத்ரு ஆட்டுக்குட்டியோ, எந்தநேரத்திலும் சுவாமியின் அறைக்குள் போவதும்வருவதுமாக இருக்கும். ஒருநாள்.... அந்த ஆட்டுக்குட்டி இறந்து விட்டது.அதைக் கண்ட சுவாமி, என்ன வியப்பு! நான் யாரைவளர்த்தாலும் அவர்கள்சீக்கிரமாக இறந்து போவார்கள் போலிருக்கிறதே! என்று மனமுருகிக் கூறினாராம்.
ஒரு ஆட்டுக்காக அவர்உருகிக் கரைந்ததைத் தெரிந்து கொண்ட நீங்கள்...அவரையே எண்ணி உருகிக் கரைந்த ஒருஜீவனையும் காண்போமா! சுவாமிக்கு மிகவும் பிடித்தமான நாய்க்குட்டி ஒன்று இருந்தது. அதன் பெயர் -பாகா. அதனுடன் சுவாமி, மிகுந்த அன்போடு விளையாடிக் கொண்டிருப்பார். அதுவும் ஸ்வாமிஜியைப்பார்க்காமல், கொஞ்ச நேரம் கூட இருக்காது. ஒருநாள்... அந்த நாய்க்குட்டி ஏதோ தொந்தரவு செய்தது என்று, மடத்தில் இருந்த சிப்பந்திகளில் சிலர் அதை கங்கை கரைக்குத் துõக்கிச்சென்று, ஒரு படகில் ஏற்றி, எதிர்க்கரைக்கு அனுப்பி விட்டார்கள். ஆனால்....அக்கரைக்குப் போன பாகாவுக்கு அங்கு இருப்புக் கொள்ளவில்லை.எப்படியாவது சுவாமியிடம் போய்ச்சேர வேண்டும் என்ற உறுதியோடு, அங்கிருந்து புறப்பட்ட இன்னொரு படகில் ஏறி விட்டது. படகில் இருந்த மக்கள் எவ்வளவு விரட்டினாலும், உங்களால் ஆனதைப் பார்த்துக் கொள்ளுங்கள்! என்பதைப் போல, குரைப்பதும், கடிக்க முயல்வதுமாக மிரட்டியது.
மக்களும், சரி! விடுங்கள். போனால் போகிறது என்று, அமைதியாக இருந்து விட்டார்கள்.படகு இக்கரைக்கு வந்ததும் தாவிக்குதித்து ஓடி யார் பார்வையிலும் படாமல் பதுங்கி இருந்தது பாகா.மறுநாள்..... காலை 4 மணிக்கு, சுவாமி தன் நீராடும் அறையை நோக்கி நடந்து கொண்டிருந்தார். அறையில் நுழையும் முன் காலில் ஏதோ இடறுவது போல இருந்தது.குனிந்து பார்த்தார். அது தன் நாய்க்குட்டி பாகா என்பது தெரிந்தது. அதை முதுகில் தட்டிக் கொடுத்து, பயப்படாதே! என்பது போல சமிக்ஞை செய்தார்.சுவாமிஜியிடம் இவ்....வளவு அன்பு வைத்திருந்த, அந் நாய்க்குட்டி சுவாமிஜிமறைந்ததும், தானும் இறந்து போனது.அதன் சடலத்தை மடத்தின் அருகில் இருந்த கங்கை நதியில் போட்டார்கள். ஆனால், அப்போது அடித்த ஒரு அலை, நாயின் சடலத்தைக் கொண்டு மடத்தின் அருகிலே கரையிலேயே கொண்டு வந்து போட்டது.அதைக் கண்ட மடத்துத்துறவிகள் ஆச்சரியப் பட்டார்கள்.உயிரோடு இருந்தவரை தான் இது, மடத்தை விட்டுப்பிரிய மனமில்லாமல் இருந்தது என்றால், இறந்த பின்பும் இந்த இடத்தின் மீது இவ்வளவு பற்றா? என உருகிய அவர்கள், அந்த நாயைப் புதைத்து சமாதி கட்டினார்கள்.கோல்கட்டா அருகிலுள்ள பேலுõர் ராமகிருஷ்ண மடத்திற்கு செல்பவர்கள்,பாகா நாயின் சமாதியையும் தரிசிக்கலாம்.
|
|
|
|