|
ஒரு ராணிக்கு நான்கு மகன்கள் இருந்தனர்.அவர்களுக்கு பக்திக்கதைகளை சொல்வாள். அவர்கள் ஒழுக்கத்தின்சின்னமாக வளர்ந்னர். காராஜாவுக்கு இதில் சற்று வருத்தம்.‘இந்தக் குழந்தைகளை இப்படியே பக்தி மார்க்கத்தில் வளர்ந்தால், நாடாளும் திறமை எப்படி வளரும்? அவர்களுக்கு சாத்வீகத்தைப் போதித்தால், எதிரிகளிடம் இருந்து நாட்டை எப்படிக் காப்பாற்றுவது?’ என்றநியாயமான வருத்தம் தான்! எனவே, பட்டத்துக்கு வர வேண்டிய மூத்த மகனுக்கு மட்டும் போர்பயிற்சி எடுக்க வெளியூர் அனுப்பினார். அவன் கிளம்பும் போது, அவனது தாய் ஒரு கடிதத்தை அவனிடம் கொடுத்து, “மகனே! நீ பெரியவனான பிறகு இதைப்படி,” என்று சொல்லி அனுப்பினாள். எல்லாரும் வளர்ந்தனர். ராணியிடம் வளர்ந்த மூன்று மகன்களும் துறவிகளாகி விட்டனர்.மூத்தமகனும் பெரியவன் ஆனதும், அம்மா கொடுத்த கடிதத்தைப் படித்தான்.அதில், ‘இவ்வுலகில் கடவுள் மட்டுமே உண்மை; பிற அனைத்தும் பொய். ஆன்மா கொல்வதும் இல்லை; கொல்லப்படுவதும் இல்லை’ என எழுதியிருந்தது. இதைப்படித்த அந்த மகனும் துறவியாகி விட்டான். பதவி பட்டம் எல்லாம் தற்காலிக சுகம் தருபவையே. நிரந்தர பதவி என்பது இறையுலகில் தான் கிடைக்கும். அதற்கு வழி காட்டுவதே ஆன்மிகம். |
|
|
|