Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » எப்போதும் கூடவே வருவது!
 
பக்தி கதைகள்
எப்போதும் கூடவே வருவது!

ஒருவனுக்கு நான்கு மனைவியர் இருந்தார்கள். அவர்களுள் நான்காவது மனைவியை மட்டும் அவன் மிக அதிகமாக நேசித்தான். அவளது எல்லா ஆசைகளையும் நிறைவேற்றினான். அவன் தனது மூன்றாவது மனைவியையும் நேசித்தாலும், அவளைத் தன் நண்பர்களுக்கு முன்னால் காட்டிக்கொள்ள பயந்தான். காரணம் வேறு யாருடனாவது அவள் ஓடி விடுவாளோ என்று பயந்தான். தனக்குப் பிரச்னைகள் வரும்போது உதவிகேட்டும், ஆறுதல் பெறவும் தனது இரண்டாவது மனைவியிடம் செல்வான். அவளும் உதவுவாள். அவனும் அப்போது நேசம் செலுத்துவான். அதேசமயம், அவன் ஒருபோதும் தனது முதல் மனைவியை நேசிக்கவே இல்லை. ஆனால் அவளோ அவன்மீது மிகவும் நேசம் வைத்திருந்தாள். அவனது எல்லா தேவைகளையும் அவள் கவனித்துக் கொண்டாள்.

ஒருநாள் அவன் மரணப்படுக்கையில் விழுந்தான். இறப்பிற்குப் பிறகும் தன் மனைவியர் தன்னோடு சேர்ந்து இருக்கவேண்டும் என விரும்பி, தான் அதிகம் நேசித்த நான்காவது மனைவியை முதலில் அழைத்தான். அவளோ அதிரடியாக மறுத்துவிட்டு விலகினாள். மூன்றாவது மனைவியைக் கேட்டான். அவளோ, நீயோ சாகப்போகிறாய். நான் வேறு ஒருவருடன் போகப்போகிறேன்! என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டாள்.  இரண்டாவது மனைவி வந்தாள். என்னால் உன் கல்லறைவரை கூட வரமுடியும். கடைசி வரை உன்னுடன் வரமுடியாது! என்று மறுத்துவிட்டாள்.

நொந்துபோன அவன் இதயம் தளர்ந்து போனது, அப்போது அவனது முதல் மனைவியின் குரல் ஒலித்தது. நீ எங்கே போனாலும் நான் உன்னுடன் இருப்பேன். இறப்பிலும் உன்னை நீங்காமல் உன்னோடு கண்டிப்பாக வருவேன்! என்று சொன்னாள். அதுவரை அவனால் அலட்சியம் செய்யப்பட்டவள் அவள். அதனால் எலும்பும் தோலுமாக சாகும் தறுவாயில் இருந்தாள். தான் அவளை நன்கு கவனித்துக் கொள்ளாததுதான். அதற்குக் காரணம் என உணர்ந்த அவன், வருந்தினான். நான் நன்றாக இருக்கும் போதே உன்னையும் சரியாகக் கவனித்திருக்கவேண்டும். தவறிவிட்டேன்! என்று அழுதான். அந்த வருத்தத்திலேயே மரித்தும் போனான். உண்மையில் நம் அனைவருக்குமே இந்த நான்கு மனைவியர் உண்டு.

1. நான்காவது மனைவி நமது உடல். நாம் என்னதான் வாழ்நாள் முழுக்க நன்றாக கவனித்துக்கொண்டாலும் கடைசியில் நம்முடன் வரப்போவதில்லை. நாம் இறந்ததும் அதுவும் அழிந்து போகிறது.

2. மூன்றாவது மனைவி நமது சொத்து சுகம்தான். நாம் மறைந்ததும் அவை வேறு யாருக்கோ உரிமையாகி விடுகிறது.

3. இரண்டாம் மனைவி என்பது நம் குடும்பம் மற்றும் நண்பர்கள் அவர்கள் மயானம் வரையில் நம்முடன் கைகோர்ப்பார்கள். அதற்குமேல் நம்முடன் கூட வரப்போவதில்லை.

4. நாம் கவனிக்காமல் விட்ட முதல் மனைவி நமது ஆன்மா. நாம் நன்றாக இருக்கும் போது நம்மால் கவனிக்கப்படாமல் நலிந்து சிதைந்து போய் இருந்தாலும் இறப்பிற்குப் பிறகும் நம்முடையதாகவே இருக்கப்போவது நமது ஆன்மாதான்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar