|
தும்புருவும், நாரதரும் வீணை இசைப்பதில் வல்லவர்கள். இருவருக்கும் தாங்களே இசையில் வல்லவர்கள் என்ற கர்வம் இருந்தது. அவர்கள் ஒருமுறை இசையில் சிறந்த ஆஞ்சநேயரிடம் தீர்ப்பு கேட்க வந்தனர். தங்கள் வீணையை அருகில் இருந்த பாறையில் வைத்தனர். அவர்களது பிரச்னையை தெரிந்து கொண்ட ஆஞ்சநேயர் தோடி ராகத்தில் பாடினார். பாடல் கேட்டு வீணைகள் இருந்த பாறை உருக ஆரம்பித்தது. வீணைகள் இறுக ஒட்டிக் கொண்டன. அவற்றை எடுக்க முடியாமல் நாரதரும், தும்புருவும் திகைத்தனர். ஆஞ்சநேயர் கண்மூடி பாடிக்கொண்டிருந்தார். அவர் விழிக்கட்டும் என காத்திருந்த போது, ஆஞ்சநேயர் மற்றொரு பாடல் பாடினார். சிறிது நேரத்தில், பாறை இளகத் தொடங்கியது. வீணைகள் நெகிழ்ந்து வெளிவந்தன. நாரதர் ஆஞ்சநேயரிடம், “அனுமனே! உன் இசைக்கு கல்லும் கரைகிறதே.... நீ பாடும் இந்த ராகத்தைக் கேட்க நாங்கள் என்ன பாக்கியம் செய்தோம்” என்றார். ‘ஹனுமத் தோடி’ என்னும் இந்த ராகம் பற்றிய வரலாறு, அருணாசல கவிராயர் பாடிய ராம நாடக கீர்த்தனையில் இடம் பெற்றுள்ளது. |
|
|
|