Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » கண்ணன் கதைகள்!
 
பக்தி கதைகள்
கண்ணன் கதைகள்!

ஒருமுறை, பிரம்மாவுக்கும் கிருஷ்ணனுக்கும் போட்டி வந்தது. கோகுலத்திலுள்ள பசுக்களையும் - கோபாலர்களையும்... ஏன், கிருஷ்ணனையும் சேர்த்து ஒரு குகையில் அடைத்துவிட்டார் பிரம்மா. அப்போது கிருஷ்ணனே பல பசுக்களையும்- கோபாலர்களையும் சிருஷ்டி செய்து, பிரம்மனைப் போல் தன்னாலும் படைக்க முடியும் என்று காட்டி, பிரம்மனின் கர்வத்தை அடக்கினான். கிருஷ்ணன், விஷ்ணுவின் அவதாரம் என்பது பிரம்மாவுக்கே தெரியாதா? அவர் ஏன் கிருஷ்ணனுடன் மோத வேண்டும்? அப்படியே பிரம்மா மோதினாலும், சிருஷ்டி தொழிலை கண்ணன் தன் கையில் எடுக்கலாமா? பிரம்மனையே தன் நாபியில் படைத்த நாராயணன், பிரம்மனோடு போட்டி போட்டது ஏன்? இப்படியெல்லாம் வாத - விவாதங்களும் எழலாம். ஆனால், சூட்சுமமான தத்துவ உண்மை ஒன்று இந்த லீலையில் உண்டு. கண்ணனின் லீலைகள் எதுவும் காரண காரியமின்றி அமைவதில்லை. இந்தக் கதையின் உண்மைச் சம்பவத்தையும், உட்பொதிந்த தத்துவ உண்மை.

கோகுலத்தில் யசோதையின் மைந்தனாக வாழ்ந்தான் கண்ணன். நல்ல அழகு, துறுதுறுப்பான வழிகள், எப்போதும் குறும்பு, எத்தனையோ சாகசச் செயல்கள், பாசத்தாலும், பக்தியாலும் கட்டுண்டுவிடும் நிலை. இப்படியிருக்கும் கண்ணனைக் காணும் போது, நம் வீட்டுக் குழந்தை கண்ணன் மாதிரி இருக்கக் கூடாதா? என்று யாருக்குத்தான் தோன்றாது. கோகுலத்தில் வாழ்ந்த பெண்கள் ஒவ்வொருவரும் அவ்வாறே ஆசைகொண்டனர். இன்னும் சிலர், கண்ணன் என் வீட்டுக் குழந்தையாக இருக்கக் கூடாதா? என ஏங்கினார்களாம். இந்த ஜன்மத்தில்தான் அந்தக் கொடுப்பினை இல்லை; அடுத்த ஜன்மத்திலாவது கண்ணனை மகனாகப் பெறவேண்டும் என்று சிலர் பிரார்த்தித்துக் கொண்டார்கள். அதுமட்டுமா? கண்ணன் கைப்பட்ட பசுவும் கன்றும் தெய்விகப் பொலிவுடன் திகழ்ந்ததைக் கண்டு, நம் வீட்டுப் பசுவும் கன்றும் கூட கண்ணன் மேய்க்கும் பசுக்களாக இருக்கக் கூடாதா? என்று எண்ணினார்கள்.

அனுதினமும் இப்படிக் கண்ணனையே நினைத்துக் கொண்டிருந்ததால், அவர்களின் விருப்பங்கள் ஏறக்குறைய ஒரு தவமாகவே ஆகிவிட்டன. பார்த்தான் கண்ணன். அவர்களது ஆசைகளை நிறைவேற்ற, தான் ஆசைப்பட்டான். பிரம்மதேவனை அழைத்தான். கோகுலத்தின் பசுக்களையும்- கோபாலர்களையும் படைத்தவனிடமே ஒப்படைத்தான். மீண்டும் தான் சொல்லும் வரையிலும் அவர்களைப் பேணிப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்றும் பிரம்மனைப் பணித்தான். பிறகு, தன்னையே பல பசுக்களாகவும், கன்றுகளாகவும் கோபாலர்களாகவும் படைத்துக் கொண்டான். திடீரென கோகுலத்தில் புதிய பொலிவு. கோகுலத்தின் அன்னையர் ஒவ்வொருவரும் தத்தமது புதல்வர்களிடம் புதிய அழகையும், பொலிவையும் கண்டு பூரித்தனர். பசுக் கூட்டங்களும் செழித்து கோகுலத்தை மேலும் அழகுபடுத்தின. வீட்டுக்கொரு கிருஷ்ணனாக வந்து, சில காலம் தன் பக்தர்களை மகிழ்விக்கவே கண்ணன் இந்த லீலை புரிந்தான்!


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar