|
ஜமீன்தார் ஒருவர், தன் நண்பரைச் சந்தித்துவிட்டு வண்டியில் ஊர் திரும்பிக்கொண்டிருந்தார். காட்டுப் பாதையில் வண்டி பழுதானது. ஒரு தச்சுக் கூடத்திற்கு ஒரு வழியாக வண்டியைக் கொண்டு சேர்த்தார். தச்சரிடம், சக்கரம் பழுதாகி விட்டது. பழுது பார்த்துத் தாருங்கள் என்றார். ஐயா! வேலையாட்கள் போய்விட்டனர். துருத்தி போட யாருமில்லை! என்றார் தச்சர். ஜமீன்தார், நான் வேண்டுமானால் துருத்தி போடுகிறேன் என்று கூறி, வேலையில் இறங்கினார். ஜமீன்தார் உடலில் வியர்வை பெருகியது. அங்கவஸ்திரத்தால் துடைத்துக் கொண்டார். வண்டி தயாரானதும், என்ன கூலி கேட்கிறீர்கள்? என்றார் ஜமீன்தார். ஒரு வெள்ளிப் பணம் என்றார் தச்சர். ஜமீன்தார் ஒரு தங்கக்காசை எடுத்துக் கொடுத்து, இது வேலைக்கான கூலி இல்லை. பணத்தால் கிட்டும் மகிழ்வை விட, உழைப்பால் கிட்டும் மகிழ்வே உன்னதமானது என்பதைக் கற்றுக் கொடுத்தீரே. அதற்கான குருதட்சணை! என்றார். |
|
|
|