Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » ராதாரமணர்
 
பக்தி கதைகள்
ராதாரமணர்

வங்காளத்தில் அவதரித்த மகான் சைதன்யமகாபிரபு கி.பி. 1511- இல் தென்னகத்திற்கு தீர்த்த யாத்திரையாக ஸ்ரீரங்கம் வந்து சேர்ந்தார். அங்கு சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொண்டார். வேங்கட பட்டரே, இந்த திவ்ய தேசத்தில் தங்குவதற்கு உங்கள் வீட்டில் இடம் கொடுத்தீர்கள். பகவான் உங்களை ஆசீர்வதிக்கட்டும் என்று ஆசியளித்தார். வேங்கடபட்டர் வீட்டில் சைதன்யர் தங்கியதால் அதற்கு சைதன்யர் நன்றி கூறினார். மகாபிரபு, இது எனது பெரும் பாக்கியம். இந்த பாக்கியம் என் மகனான கோபாலுக்கும் சேர வேண்டும். அவன் உங்களுக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்ய அனுமதியுங்கள் என்று கருணைகூர்ந்து வணங்கினார். பிறகு வேங்கடபட்டரின் மகன் கோபால் சைதன்யருக்கு பணிவிடை செய்தான். சைதன்யரோ, கோபாலா, இரவு பகல் பாராமல் எனக்கு சேவை செய்து வருகிறாயே, உனக்கு தீக்ஷை அளிக்கிறேன் என்று அவனது தலையில் கைவைத்து ஆசிஅளித்தார். கோபாலும், எல்லாம் தங்கள் கிருபை குருவே என்று வணங்கினான். வேங்கட பட்டர் குடும்பத்துக்கு நன்றி தெரிவித்துவிட்டு, சாதுர்மாஸ்ய விரதத்தை நிறைவு செய்து சைதன்யர் தமது யாத்திரையைத் தொடர புறப்பட்டார்.

வேங்கடபட்டரின் மகன் கோபாலும், மகாபிரபு, கருணை கொண்டு என்னையும் உங்களோடு அழைத்துச் செல்லுங்கள். உங்களுக்குத் தொண்டு செய்யும் பாக்கியம் எனக்குத் தடைப்படாமல் இருக்கட்டும் என்று சைதன்யரிடம் கேட்டான். அவரோ, கோபாலா, இப்போது உன் பெற்றோருக்குச் சேவை செய். அவர்கள் காலத்திற்கு பிறகு பிருந்தாவனத்திற்கு வந்து என்னைப் பார். எப்போதும் நாமஜபம் செய்தபடி இரு என்று சொல்லிவிட்டு புறப்பட்டார். கோபாலனின் 30-வது வயதில் பெற்றோர் இறைவனடி சேர்ந்தார்கள். சைதன்யரின் கட்டளைப்படி கோபால் பிருந்தாவனம் சென்றார். அப்போது சைதன்யர் புரி க்ஷேத்திரத்தில் இருந்தார். கோபால் பிருந்தாவனம் வந்திருப்பதை அறிந்து ஒரு சீடரிடம் அழைத்துவர சொன்னார். ரூப மற்றும் சநாதனர்களிடம் கோபாலை அவர்களது இளைய சகோதரனாக ஏற்றுக் கொள்ளும்படி கூறு. அவனை அவர்கள் நன்கு கவனித்துக் கொள்ளட்டும் என்று அழைத்துவர சொன்ன சீடனிடம் கூறினார். இதன் பிறகு கோபால பட்டர் சைதன்யரின் சீடர்களில் ஒருவராக கோபாலபட்ட கோஸ்வாமியாகப் போற்றப்பட்டார். சிறிய காலத்திற்குள் புரி க்ஷேத்திரத்தில் சைதன்யர் மகாசமாதி அடைந்தார்.

சைதன்யரின் இறப்பு கோபாலால் தாங்கிக் கொள்ள முயலாமல் ஓவென்று அழுதான். ஓ மகாபிரபு, நான் என்ன பாவம் செய்தேன்? என்னை விட்டு ஏன் பிரிந்து விட்டீர்கள்? இனி நான் உயிர் வாழ்வதில் பயன் என்ன? என்று அழுதுக்கொண்டே புலம்பினான். ஒருநாள் இரவு கோபால கோஸ்வாமி சைதன்யரின் பிரிவினால் மிகவும் வருந்தி துடித்துக்கொண்டிருந்தார். அன்று அவரது கனவில்... விஷ்ணு பரமாத்மா தோன்றினார். கோபாலா, என் தரிசனம் உனக்கு வேண்டுமென்றால் நீ நேபாளத்திற்குச் செல் என்று கூறினார். பகவான் சொன்னது போன்று அவரும் நேபாளத்திற்கு சென்றார். நேபாளத்தில் கண்டகி நதியில் கோபாலர் நீராடி முடித்து கமண்டலத்தில் நீரை நிரப்பினார். அப்போது... கமண்டலத்தில் ஏதோ விசித்திரமான ஒளி வீசியது. இதென்ன? கமண்டல நீரில் இதனை சாளக்கிராமங்கள் இருக்கின்றன, அதைக் கண்டு கோபால கோஸ்வாமி திகைத்தார். நீரைக் கொட்டிவிட்டு மீண்டும் நிரப்பும்போது முன்புபோல் சாளக் கிராமங்கள் கமண்டலத்தில் இருந்தன. பலமுறை இப்படியே நடந்தது. அவ்விதம் கிடைத்த 12 சாளக்கிராமங்களைத் தம் இருப்பிடத்திற்குக் கொண்டு வந்து ஓரிடத்தில் வைத்தார் கோபால்.

பக்தர் ஒருவர், சுவாமிகளே, தங்களுக்கு சாளக்கிராமங்கள் கிடைத்ததை அறிந்தோம். அதற்காக ஆடைகளையும் ஆபரணங்களையும் கொண்டு வந்துள்ளேன். அருள் கூர்ந்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கையில் ஆடை, ஆபரணத்தை கொண்டு வந்தார். அதற்கு கோபால், ஐயா, தங்கள் அன்பிற்கு நன்றி. என்னால் இவற்றைப் பராமரிக்க முடியாது. தயவு செய்து எடுத்துச் செல்லுங்கள் என்று கூறினார். ஆனால் அந்த பக்தர் அவற்றைக் கொண்டு செல்லாமல் அங்கேயே விட்டுச் சென்றார். சில நாட்களுக்குப் பிறகு கோபாலபட்டர் பிருந்தாவனம் சென்றார். சாளக்கிராமங்களுக்கு முறைப்படி பூஜை செய்து வந்தார். ஒரு நாள் பவுர்ணமி, அன்று பூஜை முடித்துவிட்டு உறங்கினார். மறுநாள் அதிகாலை நீராடிய பின் பூளை அறைக்கு வந்தார், அங்கு சாளக்கிராமக் கல் அனைத்தும் கிருஷ்ணன் சிலையாக மாறியுள்ளன. ஆ இதென்ன! சாளக்கிராமங்கள் புல்லாங்குழல் ஊதும் கோலத்துடன் அழகிய கிருஷ்ணர் வடிவத்தில் மாறியுள்ளனவே என்று அச்சரியமடைந்தார்.

கோபாலர் கொண்டு வந்த 12 சாளக்கிராமங்களில் 11 சாளக்கிராமங்கள் அழகிய கிருஷ்ணராக வடிவெடுத்து அருள்பாலித்தன. அதை அவர் பிருந்தா வனத்தில் கோயில் எழுப்பி பிரதிஷ்டை செய்தார். பகவானே, எளியேனிடத்தில் எந்த அளவிற்குக் கருணை கொண்டு திரிபங்கி கோலத்தில் அருள்பாலிக்கிறீர்கள். தாங்கள் ராதாரமணராக எப்போதும் பக்தர்களுக்கு அருள்பாலிக்க வேண்டும் என்று கோபால் வணங்கி கோரினார். கிருஷ்ணதாச, கவிராஜ கோஸ்வாமி சைதன்யரின் வாழ்வை விளக்கும் சைதன்ய சரிதாம்ரிதத்தை எழுதும் முன் எல்லா வைணவர்களிடத்திலும் கோபால பட்டர் கோஸ்வாமியிடமும் அனுமதி பெற்றார். கிருஷ்ணதாசரே, நீங்கள் செய்ய இருக்கும் பணி என்றும் நிலைக்கும். என் பணிவான வேண்டுகோள்- மகா பிரபுவின் சரிதாம்ரிதத்தில் அடியேனின் பெயரைக் குறிப்பிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். கிருஷ்ண தாசரும், அப்படியே சுவாமி என்று சொன்னார். கிருஷ்ணதாசரும் சைதன்ய சரிதாம்ருதத்தில் சில இடங்களில் மட்டுமே கோபாலரின் பெயரைக் குறிப்பிட்டுள்ளார். சில காலத்திற்குப் பிறகு கோபாலர் பிருந்தாவனத்தில் மகாசமாதி அடைந்தார். ஔரங்கசீப்பின் ஆட்சிக் காலத்தில் பிருந்தாவனத்தில் பல கோயில்கள் தரைமட்டம் ஆக்கப்பட்டன. எனவே பிருந்தாவனத்தில் மூர்த்திகள் அனைத்தும் மற்ற ஊர்களுக் கொண்டு செல்லப்பட்டு பத்திரப்படுத்தப்பட்டன.

ராதாரமணரை பிருந்தாவனத்திலிருந்து கொண்டு செல்லாமல் இங்கேயே முகலாயர்கள் அறியாதபடி பூஜை செய்வோம் என்று சீடர்களில் ஒருவர் சொன்னார். மற்றவர்களும் ஆம் அப்படியே செய்வோம் மிக நல்ல யோசனை என்று கூறினர். மகிமை வாய்ந்த பிருந்தாவனம் குருதேவர் ராமகிருஷ்ணரின் வாழ்வில் சிறப்பிடம் பெற்றது. குருதேவரது மகாசமாதிக்குப் பிறகு அன்னை சாரதாதேவி அங்கு சுமார் ஓராண்டு காலம் தவத்தில் ஆழ்ந்திருந்தார். பிருந்தாவனத்தில் அங்குள்ள கோயில்கள் அனைத்திற்கும் பலமுறை சென்று வழிபட்டார் அன்னை. ஒருநாள் ராதாரமணர் கோயிலில் அன்னை கண்களை மூடிக்கொண்டு, கைக் கூப்பி பிரார்த்தனை செய்தார். பகவானே, பிறரிடம் குறை காணும் பழக்கத்தை என்னிடமிருந்து முற்றிலும் நீக்கிவிடு. என்றுமே நான் பிறரிடம் குற்றம் காணாதிருக்க அருள்செய் என்றும் எனக்கு அசீ அளியுங்கள் என்று வணங்கினார்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar