|
துறவி ஒருவர் அரசனின் அபிமானம் பெற்று ராஜ குருவானார். அவரிடம் அரசன், உங்களுக்கு அதிகம் தொல்லை கொடுத்த எதிரி நாட்டு மன்னனைப் பழிவாங்க உங்களால் இப்போது முடியும். அவனைப் பழிவாங்க உங்களுக்கு என்னென்ன படைகள் வேண்டும்? என்று கேட்டார். துறவி புன்னகையுடன், உன்னிடமுள்ள படைகள் வேண்டாம். என்னிடமுள்ள பொறுமை, கருணை, சகிப்புத்தன்மை ஆகிய படைகளால் நான் அழிக்கத் தீர்மானித்திருப்பது அந்த எதிரி மன்னரின் விரோத மனப்பான்மையைத்தான்? என்றார் கம்பீரமாக. |
|
|
|