|
சீடன் ஒருவன் தன் குருவிடம், ஐயா! விருப்பம் போல் கடவுள் எந்த வடிவத்தையும் எடுத்துக் கொள்வார் என்று கூறுகிறீர்கள். அப்போது ஒருவனுடைய தாயின் வடிவமாகவும் அவரால் ஆக முடியும் அல்லவா? அதனால் என் தாயை நினைத்து நான் தியானம் செய்யலாமா? என்று சந்தேகம் கேட்டார். அதற்கு குரு, ஓ! செய்யலாமே! ஒருவனுடைய தாய் உண்மையில் பிரம்மத்தின் வடிவம். அவளே குரு. எனவே ஒருவன் தன் தாயை நினைத்து தாராளமாக தியானம் செய்யலாம்! என்றார். |
|
|
|