|
பாண்டுரங்கனின் பக்தரான ஏகநாதர், ஒருநாள் கங்கையில் நீராடி கரைக்கு வந்தார். அவர் மீது வெறுப்பு கொண்ட முரடன் ஒருவன், வம்புக்கு இழுக்க எண்ணினான். ஏகநாதர் மீது வெற்றிலை எச்சிலை உமிழ்ந்தான். ஆனால், ஏகநாதர் கோபம் கொள்ளவில்லை. விட்டல விட்டல என்று பாண்டுரங்கனின் நாமத்தை ஜெபித்தபடி கங்கையில் மீண்டும் நீராடச் சென்றார். இப்படி ஒருமுறை, இருமுறை அல்ல. கணக்கு வழக்கில்லாமல் தொடர்ந்து செய்தான். ஆனால், ஏகநாதர் திரும்பத் திரும்ப குளிக்கவே கங்கையில் இறங்கினார். ஒரு கட்டத்தில் அவரது பொறுமை கண்டு மனம் திருந்தி, “சுவாமி! என்னை மன்னித்து விடுங்கள்” என்று சொல்லி காலில் விழுந்தான். ஏகநாதரோ,“ நான் ஏன் உன்னை மன்னிக்க வேண்டும். கங்கையில் பலமுறை நீராடும் வாய்ப்பு உன்னால் அல்லவா கிடைத்தது. அதனால் உனக்கு நான் தான் நன்றி சொல்வேன்” என்று பதிலளித்தார். |
|
|
|