Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » கண்ணனை நினைக்காத நாளில்லையே!
 
பக்தி கதைகள்
கண்ணனை நினைக்காத நாளில்லையே!

குழந்தையாக, தோழனாக, நாதனாக, தலைவனாக மற்றும் தெய்வமாக என்று கண்ணனை பல விதங்களில் போற்றி களிப்புறுகின்றனர், அவரது அடியவர்கள். அத்தகையோரில் ஒருவர் தான், மகான் லீலாசுகர்; அவர், கண்ணனை தான் நேரில் கண்டு களித்த அனுபவத்தை கூறுகிறார்.  காயாம் பூ வண்ண மேனி, சிவந்த அதரங்களில் குறும்பு சிரிப்பு, நீண்ட கண்களில் கருணை பொங்க, இடைச்சேரி முழுவதும் தவழ்ந்து விளையாடும் என் கண்ணனை நமஸ்காரம் செய்கிறேன்... என்று சொல்லி, கண்ணனின் லீலையை, வர்ணிக்கத் துவங்குகிறார்.. அம்மா... என்று அழைத்தபடியே, வேகமாக ஓடி வருகிறான் கண்ணன்.

என்ன வேணும் கண்ணா... எனக் கேட்டபடியே வருகிறாள், யசோதை. பசிக்கறதும்மா... என்னோட பால் கிண்ணத்தை கொடு... என்கிறான். இப்ப பால் கிடையாதே... என்கிறாள் யசோதை. அப்ப, எப்ப கிடைக்கும்... என கண்ணன் கேட்க, ராத்திரியாகட்டும்; பசுக்கள் எல்லாம் வந்து விடும்; பால் கறந்து தருகிறேன்...என்கிறாள் யசோதை. கண்ணன் விடவில்லை. ராத்திரின்னா எப்படீம்மா இருக்கும்... அதுவா... ராத்திரின்னா, ஒரே இருட்டா இருக்கும்... உடனே, கண்ணன் தன் இரு கண்களையும் கைகளால் மூடி, அம்மா... இதோ பாரும்மா ஒரே இருட்டாயிடுச்சு; ராத்திரி வந்துடுச்சு... என்று கூற, யசோதைக்கு ஆனந்தம் தாங்கவில்லை. கண்ணனை ஆரத் தழுவி, பூரித்துப் போகிறாள். கண்ணனுக்கும், யசோதைக்கும் நடந்த உரையாடலை விவரித்த லீலாசுகர், கண்ணனுக்கும், யாதவ குலப்பெண் ஒருத்திக்கும் நடந்த உரையாடலை, அடுத்ததாக வர்ணிக்கிறார்... காலை நேரம்... யாதவ குல பெண் ஒருத்தியின் வீட்டுக்குள் நுழைகிறான், கண்ணன். அவ்வீட்டுப் பெண் வேலையாக இருக்கிறாள்.

உள்ளே போன கண்ணன், வெண்ணெய் பானையில் கையை விட்டு, வெண்ணெயை அள்ளியெடுத்து சுவைக்கிறான். அப்போது, அங்கு வந்த ஆய்ச்சி, கண்ணனை கையும், வெண்ணெயுமாக பிடித்து, யாரடா நீ... எங்கு வந்தாய்... என, மிரட்டுகிறாள்.
அடையாளம் தெரியாமல், எங்கள் வீடு என நினைத்து வந்துவிட்டேனம்மா... என, பதில் கூறுகிறான், கண்ணன். அது சரி; தெரியாமல் உன் வீடு என்று உள்ளே வந்துவிட்டாய்... வெண்ணெய் பானையில், ஏன் கையை விட்டாய்... எனக் கேட்கிறாள். எங்க வீட்டுக் கன்னுக்குட்டி, காணாம போயிடுச்சு; அத, தேடி பாக்கலாமேன்னு தான், இந்தப் பானைக்குள்ள கைய விட்டேன்; கோவிச்சுக்காதம்மா... என்று நிதானமாக கூற, சிரிப்பு தாங்க முடியாமல், கண்ணனை அப்படியே வாரி அணைத்து முத்தமிடுகிறாள், ஆய்ச்சி. கண்ணனை நேருக்கு நேராக தரிசித்து, அவரின் அருளை பரிபூர்ணமாக பெற்ற லீலாசுகரின், கிருஷ்ண கர்ணாமிருதத்திலிருந்து, சில துளிகள் இவை! கிருஷ்ண லீலையை நினைத்தால், எந்நாளும் தீபாவளியே!


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar