|
ஒருவர் கடவுளை நோக்கி பிரார்த்தனை செய்தார். நேரில் தோன்றிய கடவுள், உனக்கு என்ன வேண்டும்? என்று கேட்டார். நான் இழந்தவையெல்லாம் எனக்கு வேண்டும் என்றார். கடவுள், நீ எதையெல்லாம் இழந்தாய்? என்று கேட்டார். படிக்காததினால் அறிவு இழந்தேன். உழைக்காததினால் வருமானத்தை இழந்தேன். இளமையில் செய்த தவறுகளால் வாழ்க்கையை இழந்தேன். தவறான குணத்தால் மனைவி, மக்கள் மற்றும் சுற்றத்தினரை இழந்தேன் என்று கூறினார். அதற்கு கடவுள், நீ இழந்தது உனக்குத் திரும்ப வராது. ஆகவே மேற்கொண்டு எதையும் இழக்காமல் நல்லபடியாக வாழப் பழகிக்கொள் என்று கூறிவிட்டு மறைந்தார். இதுதான் வாழ்க்கை என்பதை அவரும் புரிந்துகொண்டார். |
|
|
|