|
மகான் ஒருவரைக் காண வந்த இளைஞன் ஒருவன், நான் எந்த செயலைச் செய்தாலும் தோல்வியிலேயே முடிகிறது. எவ்வளவு முயன்றாலும் வெற்றி என்பது எட்டாக் கனியாகவே உள்ளது. தவிர வாழ்க்கையும் சோதனையாக உள்ளது என்றான். அதைக் கேட்ட மகான், உடனே பொற்கொல்லர் ஒருவரிடம் அவனை அழைத்துச் சென்றார். அங்கிருந்த தங்கக் கட்டியைக் காட்டி, அதை அடிக்காமல் உருக்காமல் நீட்டாமல் நகையாகச் செய்து தரும்படி கூறினார். அதைக்கேட்ட பொற்கொல்லர், அது எப்படி முடியும்? எனக் கேட்க, புன்னகை பூத்தவாறு குரு இளைஞனிடம், தங்கம் போன்ற திறமை இருந்தாலும் அடித்தல், உருக்குதல், நீட்டல் போன்ற சோதனைகள் வரத்தான் செய்யும். அதைப் செயலாற்றுபவனே வெற்றிக் கனியைப் பறிக்க முடியும் எனக் கூற, இளைஞன் மனம் தெளிந்தான். |
|
|
|