|
வாரியார் சுவாமிகள் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தார். எதிரில் இருந்த வாலிபன் ஒருவன், என்ன சாமி! நெற்றியில் இவ்வளவு பெரிசா சுண்ணாம்பு அடிச்சிருக்கீங்களே? என்று அவர் விபூதி அணிந்திருப்பதைக் கேலி செய்தான். வாரியார் கோபப்படவில்லை. அவனிடம் ஆமாம் அப்பா. நீ படித்தவன் உனக்குத் தெரியாததல்ல; குடியிருக்கும் வீட்டுக்குத்தான் சுண்ணாம்பு அடிப்பார்கள். குட்டிச் சுவற்றுக்கு அடிக்க மாட்டார்களே என்றார். அவர் சொன்னதன் பொருள் பளிச்சென புரிந்தது, அந்த வாலிபனுக்கு. அவரிடம் மன்னிப்பும், ஆசியும் வேண்டிப் பணிந்தான். அறிவு, ஞானம், அன்பு முதலான நல்லவையெல்லாம் குடியிருப்பது நம் தலையில். அதன் முகப்புக்கு விபூதியெனும் வெள்ளை அடித்திருப்பது நியாயம்தானே என்பதை அந்த இளைஞனுக்கு மிக எளிமையாய் புரியவைத்தார் வாரியார் சுவாமிகள். |
|
|
|