|
பெருமாள் கோயிலில் உற்ஸவத்தில், சுவாமி பவனி வந்து கொண்டிருந்தார். பக்தர்கள் கண்ணாரக் கண்டு மகிழ்ந்து, தங்களின் வேண்டுதல்களை கூறிக் கொண்டிருந்தனர்.அங்கு நின்ற ஒரு மாணவனுக்கு மனதில் சந்தேகம் எழுந்தது. அவன் குருகுலம் சென்று, தன் குருவிடம், குருவே! பெருமாள் தான் கருவறையில் மூலவராக இருக்கிறாரே! அவரை மதித்து, நாம் அனைவரும் கோயிலுக்குச் சென்று தரிசிப்பது தானே முறை?குரு சீடனைத் தட்டிக் கொடுத்தபடி, கருவறையில் சுவாமியைப் பார்ப்பது விசேஷம் தான். அதற்கு ஈடேதும்கிடையாது. ஆனால், அங்கு சென்று தரிசிக்க முடியாதவர்கள் எத்தனையோ பேர், அவரைக் காணவிரும்புகிறார்கள். அதனால், வீதிதோறும், வீடுகள் தோறும் அவர் வீதியில் எழுந்தருள்கிறார். பெருமாள் வருவது உன்னைப் போன்ற ஆரோக்கியமானவர்களுக்கு மட்டுமல்ல. உடல்நலமில்லாதவர்கள், வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள், சின்னஞ்சிறு குழந்தைகள் என ஊரிலுள்ள எல்லோருக்காவும் தான், என்றார். புரிந்து கொண்டசீடன் தலையசைத்தான். |
|
|
|