|
முதல்யுகமான கிருதயுகத்தில் வரதந்து என்ற குரு, தன் சீடர்களுக்கு வேதம் கற்பித்து வந்தார். அளவுக்கு மேல் பணம் வைத்திருப்பது தவறு என்று ஒவ்வொரு மனிதனும் கருதிய காலம் அது. எனவே சீடர்கள் கொடுக்கும் சிறு அளவு தட்சணையை மட்டுமே குருமார்கள் பெறுவர். ஏழை என்றால் எதுவும் கொடுக்க வேண்டாம். ஒருமுறை சீடன் ஒருவன் படிப்பை முடித்து குருவிடம், ஐயனே! தங்களுக்கு தட்சணையாக என்ன வேண்டும்?’’ என்றான். நீயே ஏழை. உன்னால் என்ன தர முடியும். கிளம்பு,’’ என்றார். சீடனோ, ஏதாவது கேளுங்களேன்,’’ என்று திரும்பத் திரும்ப வலி யுறுத்தினான். முனிவருக்கு கோபம் வந்து விட்டது. சரி...உனக்கு நாலு வேதம், ஆறு அங்கம், ஆறு உப அங்கம் ஆக 16 படிப்பு கற்றுத் தந்துள்÷ ளன். ஒவ்வொன்றுக்கும் ஒரு கோடி பொற்காசு வீதம் 16 கோடி பொற்காசு கொண்டு வா,’’ என்று எரிச்சலுடன் சொன்னார். சீடனுக்கு அதிர்ச்சியாகி விட்டது. ஆனாலும் மனம் தளரவில்லை. ரகு என்ற அரசனிடம் சென்ற அவன், தன் நிலையைச் சொன்னான். தன்னிடமிருந்த அதிகப்படியான பொற்காசுகளை அவனுக்கு கொடுத்தார். அது பதினாறு கோடிக்கும் அதிகமாகவே இருந்தது. அவற்றை ஒட்டகங்களில் ஏற்றிக்கொண்டு முனிவரிடம் கொண்டு வந்து ஒப்படைத்தான் அவன். சீடனே! வெறும் படிப்பு மட்டும் வாழ்வுக்குப் பயன்படாது. இக்கட்டான சூழலை சமாளிக்கும் திறமையையும் ஒவ்வொரு மாணவனும் பெற வேண்டும். அதனால் தான் கோபத்துடன் உனக்கு ஒரு தேர்வு வைத்தேன். நீ கொண்டு வந்த பணத்தைக் கொண்டு பல ஏழை மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க பயன்படுத்துவேன்,’’ என்றார். தேவைக்கு மிஞ்சியதை பிறருக்கு கொடுக்க ÷ வண்டும். கஷ்ட காலத்தில் கலங்கக்கூடாது ஆகியவையே இந்தக் கதை உணர்த்தும் பாடம். |
|
|
|