|
தவறான வழிகளில் ஏராளமான பொருள் ஈட்டிய செல்வந்தரிடம் ஒரு துறவி, நல்ல வழியில் திரட்டும் செல்வம்தான் சிறந்தது. தீய வழியில் வரும் பணம் பாவத்தைத் தரும், கேடு விளைவிக்கும்! என்றார். செல்வந்தர் அதை நம்பத் தயாராக இல்லை. எந்த வழியில்வந்தால் என்ன? செல்வம் செல்வம்தான்! என வாதிட்டார்.
உடனே துறவி உள்ளே சென்று ஒரு செம்பில் பால் கொண்டு வந்து செல்வந்தரிடம் கொடுத்து பருகச் சொன்னார். அதைப் பருகிய செல்வந்தர் முகம் சுளித்தார். பாலில் மண்ணெண்ணெய் வாடை வருகிறது என்றார். உண்மைதான், அடுப்பில் நெருப்பு அணைந்துவிட்டது. சிம்னி விளக்கில் பாலை சூடாக்கி எடுத்து வந்தேன். அதுதான் மண்ணெண்ணெய் வாடை வீசுகிறது. அடுப்பில் இருப்பதும் நெருப்புதான். சிம்னி விளக்கில் இருப்பதும் நெருப்புதான். இரண்டிலும் பால் வீசுகிறது. ஆனால் சிம்னி விளக்கில் சூடாக்கினால் பாலில் மண்ணெண்ணெய் வாடை வருகிறது. அதைப்போலதான் தவறான வழிகளில் ஈட்டும் செல்வத்திலும் பாவ வாடை அடிக்கும்! என துறவி விளக்க, செல்வந்தர் மனம் திருந்தினார்.
|
|
|
|