Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » சீடனையே குருவாய் ஏற்ற பெருந்தகை!
 
பக்தி கதைகள்
சீடனையே குருவாய் ஏற்ற பெருந்தகை!

குரு - சீடன் உறவு புனிதமானது; தந்தை-மகன் உறவைவிட மேலானது என்பர். ஏனெனில் கடவுளுணர்வை வழங்குபவர் குருவே. இதெல்லாம் குரு குலம் என்னும் வழக்கம் இருந்த காலத்தில் இன்று ஆசிரியர்- மாணவர் இணக்கமே குறைந்து விட்டது! அதிக மதிப்பெண் பெற வைக்கும் ஒரு கருவி ஆசிரியர்; மதிப்பெண் மட்டுமே குறியாய் இருக்கும் மாணவர்களாகிய இயந்திரங்கள் ! இது அறிவியல் வளர்ச்சியல்ல: மனிதப் பண்பாட்டுச் சிதைவு. குருகுல கல்விமுறையில் அறிவில் குருவை மிஞ்சிய சீடர்களும் இருந்திருக்கிறார்கள். அதற்காக குருவால் பாராட்டப்பட்டவர்களும் இருக்கிறார்கள். குகை நமச்சிவாயரையும் குரு நமச்சிவாயரையும் இதற்கு உதாரணமாகக் கூறலாம். சீடனின் வளர்ச்சியில் பொறாமைகொண்ட குரு யாதவப்பிரகாசரை, ராமானுஜர் வாழ்வில் பார்த்திருக்கிறோம். ஆனால் சீடனையே குருவாக ஏற்றுக்கொண்ட அற்புதமான ஒரு குருவைப் பற்றி இங்கு காண்போம்.

காலடி சங்கர மடம். காலை நேரம் பாடம் தொடங்க வேண்டும். குரு ஆதிசங்கரர் வருகிறார். சீடர்கள் எழுந்து நெற்றிக்கு நேரே கரம் குவித்து வணங்குகின்றனர். சங்கரர் சைகையால் அனைவரையும் அமரச்சொல்கிறார். அவரும் பீடத்தில் அமர்கிறார். அப்பொழுது சீடர்களிடையே முணுமுணுப்பு. ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொள்கின்றனர். என்ன அங்கே முணுமுணுப்பு? ஒருவரையொருவர் பார்த்துக்கொள்கிறீர்களே என்று கேட்டார் சங்கரர். சீடன் ஒருவன் அதுவந்து என்று ஆரம்பித்தான். மற்றொருவன் அவனை உட்காரவைத்துவிட்டான். இன்னொரு சீடன் குருதேவா என்று ஆரம்பித்து பேசாமல் நின்றான். என்ன விஷயம்? எதுவானாலும் தயங்காமல் சொல்லலாம் என்றார் சங்கரர். ஒரு சீடன் புதிதாய் வந்திருக்கும் சீடரான ஹஸ்தாமலகருக்கு என்று சொல்லி மேற்கொண்டு பேசத் தயங்கினான். ஆம், ஹஸ்தாமலகருக்கு என்ன? ஹஸ்தாமலகர் எழுதிய சுலோகங்களுக்கு தாங்களே உரை எழுதினீர்கள். மிகவும் நன்றாயிருந்தது! ஆனால். ஆனால் என்ன? அவனைத் தங்கள் ஆசார்யன் (குரு) என்று சொல்கிறீர்களே  ஆம் சொன்னேன். சீடர்கள் பலரும் ஒரே குரலில், அதைத் தான் குருதேவா எங்களால் நினைத்துக்கூடப் பார்க்கமுடியவில்லை மிகவும் குழம்பிப்போய் இருக்கிறோம் என்றனர். நான்தானே ஹஸ்தாமலகர் என்று பெயர் வைத்தேன்? என்று சீடர்களிடம் கேட்டார் சங்கரர் ஆம் குருதேவா ஏன் அப்படி வைத்தேன் குரு சொன்னது எதுவானாலும் ஏற்பதுதான் எங்களுக்குத் தெரியும். ஹஸ்தம் என்றால் என்ன?
கை. உள்ளங்கை என்றும் சொல்லலாம். ஆமலகம் என்றால்? நெல்லிக்கனி. ரொம்ப சரி. இப்பொழுது இந்த ஹஸ்தாமலகனை நான் முதலில் சந்தித்ததைப் பற்றி உங்களிடம் சொல்லியாகவேண்டும்.

இவனது தந்தை பிரபாகரன் இந்த ஏழு வயதுச் சிறுவனை அழைத்துக்கொண்டு என்னிடம் வந்தார். அப்பொழுது நான் யாத்திரையிலிருந்தேன். இவன் கல்வி நாட்டமின்றி-மனவளர்ச்சியுமின்றி ஜடம் போல் இருக்கிறான் என்று வருத்தப்பட்டார். தந்தை அப்பொழுது நான் அந்த சிறுவனிடம் நீ ஏன் ஜடம்போல் இருக்கிறாய்? என்றேன். அவன் உடனே, நான் ஜடமல்ல; என்னால் ஜடமும் உயிருள்ளதாகும். பசி, தாகம் தூக்கம், ஏமாற்றம், மயக்கம், இறப்பு போன்ற எதுவும் எனக்கில்லை. வளர்தல், மூப்பு, அழிவு எதுவுமில்லை என்று கூறி உபநிடதகருத்துகளை பன்னிரண்டு சுலோகங்களில் (ஆத்ம தத்துவம்) விளக்கினான். அவற்றைத் தான் நான் ஹஸ்தாமலகம் (உள்ளங்கை நெல்லிக்கனி) என்ற பெயரில் நூலாக்கினேன். அவனுக்கும் ஹஸ்தாமலகன் என்று பெயரிட்டேன் என்று சொல்லிமுடித்தார் சங்கரர். இதற்கு ஒரு சீடன் வேகமாய் எழுந்தான் குருவே! அதற்காக அவனை எப்படி தங்களுக்கு ஆசார்யனாக சொல்லலாம்? கோவிந்த பகவத் பாதரைத் தேடி குருவாய் அடைந்த எங்கள் குரு, ஒரு சிறுவன் சில உபநிடதக் கருத்துக்களைச் சொன்னதற்காக அவனை குருவாக ஏற்பதை எங்கள் மனம் ஒப்பவில்லை குருதேவா.

ஆம் குருதேவா என்று பலரும் ஒரே குரலில் கூறினர். அமைதியாய் இருங்கள், சிறுவனாய் நீங்கள் காணும் இவன் யாரென்று புரிய வைக்கிறேன். இவன் இரண்டு வயது குழந்தையாய் இருந்தபோது, இவன் தாய் நீராடுவதற்காக குளத்திற்குச் செல்லும்போது இவனையும் அழைத்துச் சென்றாள். அங்கு ஒரு துறவி இருந்தார். சுவாமி, நான் குளித்துவிட்டு வருகிற வரை என் குழந்தையைப் பார்த்துக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு குளிக்கச் சென்றாள். சிறிது நேரத்தில் துறவி நிஷ்டையில் ஆழ்ந்து விட்டார். அப்பொழுது குழந்தை தவழ்ந்து சென்று குளத்தில் மூழ்கிவிட்டது. குளித்துக் கரையேறிய தாய் குழந்தையைக் காணாமல் கதறினாள். நிஷ்டையிலிருந்த துறவியை உலுக்கி அவர் தியானத்தைக் கலைத்து, சுவாமி, என் குழந்தை எங்கே? என்று பதட்டத்தோடு கேட்டாள். அவருக்கு விஷயம் புரிந்துவிட்டது. குளத்தில் மூழ்கி இறந்து விட்டதே! பாவத்திற்காளாகிவிட்டேனே. அம்மா, கலங்காதே உன் குழந்தையை உயிர்ப்பித்துத் தருகிறேன் என்று உறுதிகூறினார். அதன்படி துறவி தன் உடலைக் கிடத்தி, உயிர்நீத்த அந்தக் குழந்தையின் உடலில் தன் உயிரைப் புகுத்தினார். குழந்தை பிழைத்தது; துறவி உடல் குளக்கரையிலேயே சமாதி வைக்கப்பட்டது. மறுபிறவியில் அந்த குழந்தை பிரபாகரனுக்கு மகனாய் பிறந்தது. அந்த துறவியாகிய ஞானியே இந்த ஹஸ்தாமலகன், இன்று சிறுவானயினும் பூர்வஜென்ம ஞானி இவன். ஆகவே தான் அவனை எனது ஆசார்யன் என்றேன்!

சங்கரர் சொல்லிமுடித்ததும் சீடர்கள் வியப்பிலாழ்ந்தனர் மன்னியுங்கள் குருதேவா இனி நாங்களும் ஹஸ்தாமலகரை குருவாகவே மதிப்போம் என்றனர்.

உருவு கண்டு எள்ளாமை வேண்டும்
உருள்பெருத்தேர்க்கு
அச்சாணி அன்னா ருடைத்து

ஹஸ்தாமலகர் உள்ளிட்ட ஆதிசங்கரரின் நான்கு சீடர்களுமே ஒவ்வொரு வகையில் சிறப்புடையவர்களே!


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar