|
முதல் பக்கம் »
பக்தி கதைகள் » ராமகிருஷ்ணரின் குழந்தைகள்! |
|
பக்தி கதைகள்
|
|
ஓர் அரசன் இருந்தான் அவர் அவ்வப்போது படகில் உல்லாசமாக சென்று வருவது வழக்கம் அப்படிச் செல்லும் போது குடும்பத்தினர் மற்றும் மந்திரியையும் அழைத்துச் செல்வார். ஒருமுறை அப்படி செல்லும்போது அரசர் மந்திரியிடம் சில தத்துவார்த்தமாக கேள்விகளை கேட்பார். அப்படி அரசர் மந்திரியிடம், ஏன் கடவுள் அவதரிக்கிறார்? அதற்கு மந்திரி பக்தர்கள் மேல் இருக்கும் அன்பினால் என்றார். அந்த பதில் அரசருக்கு திருப்தி அளிக்கவில்லை.
கடவுள் என்றால் ஸர்வ வல்லமை படைத்தவர் அவர் எங்கிருக்கிறாரோ அங்கு இருந்து கொண்டே அன்பு செலுத்தலாம் அல்லது அவருக்கென எத்தனையோ தேவதைகள் இருக்கிறார்கள் அவர்களை அனுப்பலாம் அவர் ஏன் அவதரிக்க வேண்டும்? என்றார். அதற்கு மந்திரி கூறினார் கடவுளுக்கு மிகவும் அன்பு இருக்கிறது. அதனால் அவர் தனது சொந்த குழந்தையைப் போல் பக்தர்களை பார்க்கிறார். அப்போதும் அரசருக்கு திருப்தியில்லை. அப்போது அவரது மகன் படகில் பந்து விளையாடிக் கொண்டு இருந்தான் பந்து தண்ணீரில் விழுந்து விட்டது உடனே பந்தை எடுப்பதற்கு அரசரின் மகன் தண்ணீரில் குதித்தான் அதை கண்டு காவலர்கள் குதித்தார்கள் இது அரசருக்கு தெரியவந்தது. அரசர் உடனே தண்ணீரில் குதித்து மகனை காப்பாற்றினார்.
மறுநாள் அரசவையில் மந்திரி அரசரிடம் கடவுள் ஏன் அவதரிக்கிறார் என்பதற்கு நேற்று பதில் கிடைத்திருக்குமே! என்றார். அதற்கு அரசர் இல்லை என்றார். நேற்று தெளிவான பதில் கிடைத்ததே. மந்திரி, நேற்று தண்ணீரில் ராஜகுமாரன் விழுந்த போது எத்தனையோ பேர் நீந்தத் தெரிந்தவர்கள் இருக்கிறார்கள், வாட்டர் ஜாக்கெட் அணிந்தவர்கள் இருக்கிறார்கள், சேவகர்கள் இருக்கிறார்கள். அப்படி இருக்க நீங்கள் ஏன் தண்ணீரில் குதித்து காப்பாற்ற வேண்டும் என்றார். அதற்கு அரசன் அவன் என் சொந்த மகன் அவன் மீது நான் அன்பு வைத்திருக்கிறேன் என்றார். அதற்கு மந்திரி அதுபோல்தான் கடவுள் தன் பக்தர்களை சொந்த குழந்தையை போல் நேசிக்கிறார். அதனால் கடவுள் அவதரிக்கிறார் என விளக்கம் கொடுத்தார். பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் நம் எல்லோரையும் தனது சொந்த குழந்தையை போல் பார்க்கிறார். நமக்கு எந்தவிதமான பிரச்சனையோ துன்பமோ வந்தாலும் அவர் நம்முடனே இருக்கிறார். ஸ்ரீராம கிருஷ்ண ஆரதி பாடலில் வருகிறது “ப்ரேமபாதார் ” அளவற்ற கருணை உடையவர் என சுவாமி விவேகானந்தர் வர்ணிக்கிறார். கருணையினால் அவர் என்ன செய்கிறார் என்றால் பக்தர்களுடைய துன்பங்களை நீக்குகிறார்.
அவர் பக்தர்களுடைய துன்பங்களை மட்டும்தான் நீக்குவாரா மற்றவர்களுடைய துன்பங்களை நீக்கமாட்டாரா என்றால் அதற்கு ஸ்ரீராமகிருஷ்ணரின் முக்கியமான சீடராகிய அமுதமொழிகளை எழுதிய மகேந்திர நாத்குப்தர் கூறுகிறார் நீங்கள் கடுமையான வெயிலில் சென்று கொண்டிருக்கிறீர்கள் திடீரென ஒருவர் உங்களுக்கு ஒரு குடையை கொடுக்கிறார். காலில் அணிவதற்கு செருப்பு ஒன்று கொடுக்கிறார். குடிப்பதற்கு குளிர்பானம் கொடுக்கிறார் என்றால் உங்களுக்கு எவ்வளவு சந்தோசமாக இருக்கும் அதுபோல் துன்பத்தில் இருக்கும் போது கஷ்டத்தில் இருக்கும் போது பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் நமக்கு ஒரு குடை மாதிரி, குளிர்பானம் மாதிரி இருக்கிறார் என்று மகேந்திரநாத் குப்தர் கூறுகிறார்.
|
|
|
|
|