|
பணக்காரர் ஒருவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. அவருக்கு திருமண வயதில் ஒரு மகள் இருந்தாள். கல்யாணம் முடிக்க பணம் தேவைப்பட்டது. என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பினார். பெரியவர் ஒருவரைச் சந்தித்து ஆலோசனை கேட்டார். அவர், “தம்பி... மனம் வருந்தாதே! உனக்குத் தெரிந்த நண்பர், உறவினர்களின் வீட்டுக்குச் செல். அவர்களிடம் நிலைமையைச் சொல்லி உதவி கேள். நிச்சயம் மகளின் திருமணத்திற்கு நல்வழி பிறக்கும்,” என்றார். “ஐயா....தன்மானம் என்னைத் தடுக்கிறது. இருந்தாலும் என்ன செய்வது? என் மகளுக்காக பிறரிடம் கை நீட்டத்தான் வேண்டியிருக்கிறது. உறவினர்கள் உதவி செய்ய மறுத்தாலோ அல்லது அவமானப்படுத்தினாலோ என் மனம் படாதபாடு படும்.... என்ன செய்வதென்றே தெரியவில்லை,’’ என்றார் அந்த முன்னாள் பணக்காரர். அதற்கு பெரியவர், “ நீ யார் வீட்டுக்குச் சென்றாலும் எதிர்பார்ப்பு இல்லாமல் செல். அங்கு உண்டாகும் சூழ்நிலை ஏற்கனவே கடவுளால் தீர்மானிக்கப்பட்ட ஒன்று என்பதை புரிந்து கொள். உதவி கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் நன்றி சொல்லி விட்டுப் புறப்படு. இந்த எண்ணம் இருந்தால் எல்லாம் நல்லதாக நடக்கும்” என்றார் பெரியவரின் ஆலோசனையை ஏற்ற அவரும் மனத்தெளிவுடன் புறப்பட்டார். |
|
|
|