Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » ராதையின் கருணை!
 
பக்தி கதைகள்
ராதையின் கருணை!

பிருந்தவானத்தில் ராதா குண்டம் என்ற பகுதி ராதாதேவி வாழ்ந்து அன்பைப் பரப்பிய புண்ணியஸ்தலம். சுவாமி விவேகானந்தர் இந்த இடத்துக்கு வந்து தங்கியிருந்தபோது, அவரிடம் ஒரே ஒரு துணிதான் இருந்தது. அதை ஒரு நாள் அவர் கசக்கி உலர்த்தி வைத்திருந்தபோது, ஒரு குரங்கு வந்து தூக்கிக்கொண்டு போய், மரத்தின் உச்சாணிக் கிளையில் உட்கார்ந்துவிட்டது. சுவாமிஜி குரங்கிடம் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தார். அது அழகு காட்டிவிட்டு மேல் கிளையில் போய் உட்கார்ந்து கொண்டுவிட்டது.

சுவாமிஜிக்குக் கோபம் வந்துவிட்டது. குரங்கின் மீது அல்ல! அந்தப் புண்ணியத் தலத்தில் பாதம் பதித்து வலம் வந்த ராதாதேவியிடம்! எல்லோரும் உன்னைக் கருணையின் வடிவமாகப் போற்றுகிறார்கள். ஆனால், உன்னைத் தரிசிக்க வந்த இந்த ஏழையின் துணியைப் பறித்துக் கொண்டு விட்டாயே? பக்கத்தில் உள்ள வனத்துக்குச் சென்று பட்டினிகிடந்து உயிரை விடுகிறேன். அந்தப் பழி உன்னைச் சேரட்டும் என்று கூறியவராய் சுவாமிஜி காட்டை நோக்கி ஓடலானார். ஆனால், பிரேமையின் வடிவமான ராதை சுவாமிஜியைத் தவிக்கவிடுவாளா என்ன? நடந்ததை எல்லாம் எங்கிருந்தோ பார்த்துக் கொண்டிருந்த ஒருவன், காவி உடையும், சிறிது உணவும் எடுத்துக்கொண்டு காட்டுக்குச் சென்றான். அங்கே சுவாமிஜியைச் சந்தித்து அவற்றைக் கொடுத்துவிட்டு சென்றுவிட்டான். சுவாமிஜியின் நெஞ்சம் உருகிவிட்டது. வேட்டியை அணிந்து உணவையும் உட்கொண்ட பின் வனத்தில் இருந்து வெளியே வந்தார். அவரைத் தேடி வந்த அந்த வாலிபனை எவ்வளவு தேடியும் அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் அவர் தன்னுடைய துணியை முன்பு எங்கே உலர்த்தி இருந்தாரோ அந்த இடத்திலேயே காய்ந்துகொண்டிருந்தது.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar