Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » உபதேசம்
 
பக்தி கதைகள்
உபதேசம்

மகான்களின் உபதேசங்களை, ஆன்மிகப் பேருரைகளில் கேட்டு, அவற்றைக் கடைப்பிடிப்பதன் மூலம், மனிதன் தன் எண்ணங்களை ஒழுங்குபடுத்தி, தனது வாழ்க்கையை நெறிப்படுத்திக்கொள்ள முடியும். என் நண்பர் ஒருவருக்கு மனம்கொள்ளாத பெருமிதம், தான் ஆன்மிக உரை எதையும் மிஸ் பண்ணாமல் கேட்டுவிடுகிறோம் என்பதில்! அதைப் பெருமையாக என்னிடம் பகிர்ந்துகொள்ளவும் செய்வார். அந்த நாட்களில் சுவாமி சின்மயானந்தாவின் கீதை உரைகளை நிறையக் கேட்டிருக்கேன். சுவாமிஜி மேடையில் வந்து உட்காரும் வரை, ஹரே ராம... ஹரே ராம... ராம ராம ஹரே ஹரே... என்று சீடர்கள் கோரஸ் பாடிக்கொண்டிப்பது காதுகளில் ரம்மியாக ஒலிக்கும். உரை துவங்கியதும், திறந்தவெளி அரங்கம் நிசப்தமாகிவிடும். அட்டகாசமான ஹைகிளாஸ் ஆங்கிலத்தில் பகவத் கீதையை அவர் விளக்கும்போது, கிருஷ்ணரும் அர்ஜுனனும் நம் கண்முன் வந்து உரையாடுவதுபோல் இருக்கும். நடுவில் யாராவது எழுந்து சென்றால், சுவாமிஜிக்குக் கோபம் வந்துவிடும். பேசுவதை நிறுத்திவிடுவார். எழுந்த நபர், வீடு போய்ச் சேர்ந்த தகவல் வந்த பிறகுதான் இவர் மறுபடியும் உரையைத் துவங்குவார். ஒவ்வொரு நாளின் முடிவிலும், கடைசி ஐந்து நிமிடம் விளக்குகளை அணைத்துவிட்டு, தியான வகுப்பு நடத்துவார். சே... சான்ஸே இல்லை..! என்று சிலாகித்த நண்பர், அடுத்த சுவாமிஜிக்குத் தாவினார்.

நீங்க சுவாமி தயானந்த சரஸ்வதி கேட்டிருக்கீங்களா? என்று கேட்டார். இல்லியே... என்றேன். நான் பல தடவை கேட்டிருக்கேன். என்னா ஞானஸ்தர்கிறீங்க..! ஒரு தடவை, பகவத் கீதையின் பதினெட்டு அத்தியாயங்களின் சாராம்சத்தையும் ஒரே மூச்சுல, பத்து நிமிஷம் கடகடன்னு அவர் சொல்லி முடிச்சப்போ அசந்துட்டேன். அரிய பெரிய தத்துவங்களை எளிமையான ஆங்கிலத்துல அவர் விளக்கறதை இன்னிக்கெல்லாம் கேட்டுக்கிட்டே இருக்கலாம். என்ற நண்பர், என்னை விடுவதாக இல்லை. அதே மாதிரி, சுவாமி பார்த்தசாரதி லெக்சர் பண்ண எப்போ சென்னை வந்தாலும் போயிடுவேன். கீதையைப் புரிய வைக்க அவர் சொல்ற ஒவ்வொரு குட்டிக் கதையும் ஒரு சிறுகதை. சில சமயம் கோபமாகவும், சில சமயம் நறுக்குன்னும் அவர் கமென்ட் அடிக்கறது கேட்க ருசியா இருக்கும்.

சகலத்தையும் கரைத்துக் குடித்துவிட்டது போன்ற பெருமை நண்பருக்கு! அப்புறம், கீதையையும் திருக்குறளையும் ஒப்பிட்டு சுவாமி ஓங்காரானந்தா உரை நிகழ்த்துவது, பார்க்கவும் கேட்கவும் அழகா இருக்கும்... என்றவர், இன்னொரு சுவாமிஜியைத் தேடிப் பிடித்து அழைத்து வருவதற்குள், அவரை இடைமறித்தேன். எல்லாம் சரி... இத்தனை கீதை உரைகளைக் கேட்டதுல உங்களுக்குக் கிடைச்ச பலன் என்ன? இந்தக் கேள்வியை அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை என்பது அவர் முகத்திலேயே தெரிந்தது. ஒரு கணம் திணறியவர், அது... அது வந்து... கீதை என்ன சொல்லுது? கடமையைச் செய்; பலனை எதிர்பாராதே ! ன்னுதானே? நானும் அப்படித்தான்... கர்மாவைச் செய்வேன். பலனை எதிர்பார்க்கமாட்டேன்! என்று சொல்லிச் சிரித்தார். நல்ல சமாளிப்பு!


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar