|
குரு ஒருவரிடம் ஞானம் பெறுவதற்காக நிறைய சீடர்கள் பயிற்சி பெற்று வந்தனர். ஒரு நாள் குருவின் முன் தோன்றிய தேவதை, கடவுள் என்னை இங்கு அனுப்பினார். உங்களுக்கு வாழ்நாள் எத்தனை வருடங்கள் தேவை என்று கேட்டு வரச் சொன்னார். நீங்கள் கோடி ஆண்டுகள் வாழ விரும்பினாலும் கிடைக்கும்! என்றது. அதற்க அவர், நான் மற்ற மனிதர்களைப் போல் சராசரியாக வாழ்ந்தாலே போதும்! என்றார். வரம் கொடுத்து தேவதையும் மறைய, சீடர்கள் திகைத்து, குருவே! நீங்கள் ஒரு லட்சம் ஆண்டுகள் உயிரோடு வாழ்ந்தால் உங்களால் எத்தனை பேர் ஞானம் பெறுவார்கள்? கிடைத்த நீண்ட வாழ்நாளை நீங்கள் ஏன் வேண்டாம் என்று சொல்லிவிட்டீர்கள்? என்றனர். அதற்கு குரு, நான் நீண்ட காலம் உயிரோடு இருந்தால், இங்கு வரும் எல்லோரும் தங்கள் வாழ்நாள் காலத்தை நீட்டிக்கொள்ளத்தான் விரும்புவார்கள். யாரும் ஞானத்தைப் பெற விரும்ப மாட்டார்கள்! என்றார். |
|
|
|