|
ஒருமுறை பகவானுக்கும் ஒரு பக்தருக்கும் இடையில் ஒரு போட்டி வந்தது. அண்ட சராசரங்களையும் நான் என்னுள் அடக்கி வைத்திருக்கிறேன். நான்தான் பெரியவன் என்றார் பகவான். உன்னை என் காது வழியே நுழைத்து என் இதயத்தில் அடக்கி வைத்திருக்கிறேன். எனவே, உன்னைவிட நான்தான் பெரியவன் என்றார் பக்தர். அந்த பக்தர் வேறு யாருமல்ல, நம்மாழ்வார்தான்! காது வழியே நுழைத்து இதயத்தில் அடக்கி இருக்கிறேன் என்பதில் ஒரு தத்துவம் இருக்கிறது. பகவானின் நாமத்தை குருவின் மூலமாக உபதேசம் பெற்று, அவனை இதயத்தில் இருத்தி பூஜித்து பக்தி செலுத்துவதையே அது குறிக்கிறது. இதனையே ஔவையாரும், தொண்டர்தம் பெருமை சொல்லவும் அரிதே என்று பாடி இருக்கிறார். |
|
|
|