|
ஜென் துறவியிடம் வந்த நாத்திகன் ஒருவன், நீங்கள் சொல்கிற மனம், தெய்வம் எல்லாம் வெறும் கற்பனை. அப்படி எதுவும் இல்லை. எல்லாமே சூனியம்தான்! என்றான் கேலியாக. ஜென் துறவி எதுவும் பேசவில்லை. தன்னுடைய கைப்பிரம்பால் அவனை பலமாக ஒரு அடி அடித்தார். வலி பொறுக்காத வாலிபன் மிகுந்த கோபம் பொங்க, ஏன் என்னை அடித்தீர்கள்? என்றான். மனம் என்ற ஒன்று இல்லாவிட்டால் இந்தக் கோபம் எங்கிருந்து வந்தது? என்று கேட்டார் துறவி. பதில் சொல்லத் தெரியாத நாத்திகன் தலை குனிந்தான். |
|
|
|