Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » ஆத்மா ஸமமானது!
 
பக்தி கதைகள்
ஆத்மா ஸமமானது!

பகவான் கிருஷ்ணர், எவரொருவர் அனைத்து உயிர்களுக்குள்ளும் உறையும் என்னை உள்ளவாறு உணர்ந்து வழிபடுகிறாரோ, அந்த ஞானயோகியானவர் எத்தகைய வாழ்க்கை முறையில் இருந்தாலும், யாண்டும் என்னில் இருக்கிறார் என்ற கருத்தை உபதேசித்தருளினார்.

ஆத்மௌபம்யேந ஸர்வத்ர ஸமம் பஸ்யதி யோர்ஜுந
ஸுகம் வாயதி வாது:க்கம் ஸ யோகீ பரமோ மத:

அர்ஜுனா! தன்னை உபமானமாகக் கொண்டு, வாழ்வின் இருமை அனுபவங்களாகிய இன்பத்தையும் துன்பத்தையும் ஸமமாகக் காணும் யோகியானவர் மேன்மை பொருந்தியவர் என்பது எனது எண்ணம். ஞானியின் மனமானது எவ்வாறு பரந்து விரிந்ததாக இருக்கிறது என்பதை பகவான் இந்த சுலோகத்தில் கூறுகிறார். ஞானியானவர் தன்னுடைய உடலோடு மட்டும் தன்னை இணைத்துக் கொள்வதில்லை. அனைத்து விதமான உடல்களுக்குள்ளும் உறையும் ஒரே ஆத்மாதானே என்பதை உணர்ந்து, அனைத்து உடல்களிலும் தன்னை இணைத்துக் கொள்கிறார். அனைவரது உடல்களும் தன்னுடைய உடல்களே என்று கருதுகிறார். இவ்வாறு பிரபஞ்சத்தையே தன்னுடைய ஸ்வரூபமாக எண்ணுவதால், ஞானியால் எவரையும் காயப்படுத்தவோ, துன்புறுத்தவோ முடிவதில்லை. எவரைத் துன்புறுத்தினாலும், அது தன்னைத் துன்புறுத்தியதாக ஆகும். எனவே, ஞானி, எவரையும் துன்புறுத்துவதில்லை. அவர் கருணையின் திருவுருவாக, அஹிம்ஸையின் திருவடிவமாகத் திகழ்கிறார்.

எவரேனும் துன்பப்படும்பொழுது, அவர்களுடைய துன்பத்தை அவரால் உணர முடிகிறது. பிறருடைய துன்பத்தை அவரால் உணர முடிவதால், எவரையும் துன்புறுத்துவதில்லை. அது மட்டுமல்ல, ஞானியானவர் துன்பத்தில் தவிப்பவர்களுக்கு உதவ உடனடியாக முன்வருகிறார். ஆத்மௌபம்யேந ஸர்வத்ர தன்னைப்போல் அனைவரையும் எண்ணுகிறார். உயிர்களனைத்தையும் தன்னுடைய ஸ்வரூபமாகவே காண்கிறார். ஆத்மா ஒன்றே, அது ஸமமானது. ஸமமான அந்த ஆத்மாவை உணர்ந்த ஞானியானவர், எவரிடத்தும் பராபக்ஷமில்லாதவராக, தன்னலமற்றவராக விளங்குகிறார். அவர் அனைத்து உடல்களுக்குள்ளும் தன்னையே காண்பதால், பிறருடைய உடல்களைக் காட்டிலும் தன் உடலை முக்கியமானதாகக் கருதுவதில்லை. ஞானியானவர் பிரபஞ்ச நியதியைக் கடைப்பிடிக்கிறார். எனக்குப் பிறர் எதைச் செய்யக்கூடாது என்று நான் எண்ணுகிறேனோ, அதனை நான் பிறருக்குச் செய்யக் கூடாது. எனக்குப் பிறர் எதைச் செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேனோ, அதனையே நான் பிறருக்கும் செய்ய வேண்டும். இதுவே பிரபஞ்சத்தின் நியதி.

தன்னைப் போல் தான் பிறரும். எனக்கு அடித்தால் வலிப்பதுபோல, பிறருக்கும் வலிக்கத்தான் செய்யும். எனவே, எவருக்கும் துன்பம் தராதவராக ஞானி இருக்கிறார். பிறருடைய துன்பத்தைத் தன்னுடைய துன்பமாகக் கருதி, அதனை நீக்க முயலுகின்ற ஞானியானவர், பிறருடைய இன்பத்திலும் தான் இன்பம் அடைகிறார். எவருடைய இன்பத்தைக் கண்டும் ஞானியானவர் பொறாமைப் படுவதில்லை. எவரையும் அவர் வெறுப்பதில்லை. ஞானியானவர் உலகையே நேசிக்கிறார். இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள அனைவர் மீதும், அனைத்து உயிர்கள் மீதும் பாரபட்சம் சிறிதும் இல்லாமல் அன்பு செலுத்துகிறார். இதுவே ஞானத்தின் பலன். பலர் வேதாந்தம் கற்பது என்பது, சுயநலமானது என்றே கருதுகின்றனர். குடும்பத்தைத் துறந்து, தன்னுடைய சுய லாபமாகிய மோட்சத்துக்காக முயற்சிப்பது தவறு என்றவாறு சிலர் எண்ணுகின்றனர். ஆனால், உண்மையில் ஞானியைப் போன்று உலகை நேசிப்பவர் வேறு எவரும் இல்லை. ஞானியானவர், ஒரு குறுகிய வட்டத்துக்கு உள்ளிருந்த அபிமானத்தைத் துறந்துவிடுகிறார். இந்தப் பிரபஞ்சத்தையே தன்னுடைய குடும்பமாகக் கொள்ளக்கூடிய, பரந்து விரிந்த பார்வை ஞானியினுடையது. அத்தகைய ஞானியானவர் போற்றதலுக்குரியவர். எனவேதான், பகவான் அவரை மேலான, சிறந்த யோகி என்று குறிப்பிடுகிறார்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar