Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » தாம்புக் கயிறு!
 
பக்தி கதைகள்
தாம்புக் கயிறு!

சிறுவன் ஒருவன் தன் அப்பாவுடன் தோட்டத்தைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பினான். தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தவன் ஒரு விஷயத்தைக் கவனித்தான். அங்கிருந்த மாடுகள், நீளம் குறைந்த தாம்புக் கயிற்றால் முளைக்கொம்பில் கட்டப்பட்டிருந்தன. அதனால் அந்த மாடுகள் தங்கள் முன் கொட்டப்பட்டிருந்த பற்களை மிகவும் சிரமப்பட்டு உண்ணுவதாகத் தோன்றியது அவனுக்கு. கயிற்றை இன்னும் கொஞ்சம் நீளமாக விட்டிருந்தால், அவற்றுக்கு இப்படியொரு சிரமம் இருந்திருக்காது என்று எண்ணினான். இதைப்பற்றி தந்தையிடம் கேட்கவும் செய்தான். ஏன் மாடுகளை மிகவும் நெருக்கமான கயிற்றால் கட்டி வைத்துள்ளீர்கள். பெரிய நீளமான கயிற்றில் கட்டி வைத்திருந்தால், சிரமம் இல்லாமல் அவை சுற்றி வந்து புற்களை மேயுமே? என்றான்.

தந்தையும் சிரித்தவாறு, உனக்காக ஒரு மாட்டை, நீ சொல்வது போல் கட்டிவைக்கிறேன் என்றவர், ஒரு மாட்டை மட்டும் அவிழ்த்துக் கொல்லையில் இருந்த மரத்தில், ஒரு நீளமான கயிற்றில் கட்டிவைத்தார். அந்த மாடு இப்போது சிரமம் இன்றி புல் மேய்ந்ததைக் கண்டு சந்தோஷம் சிறுவனுக்கு; மீண்டும் விளையாடச் சென்றுவிட்டான். சிறிது நேரம் கழித்து வந்தவன், அந்த மாட்டைக் கண்டு அதிர்ந்துபோனான்! மாடு புல்மேயும் சுவாரஸ்யத்தில் கயிற்றுடன் மரத்தையே சுற்றிச் சுற்றி வந்து, கயிறு முழுவதும் மரத்தில் சுற்றிக் கொண்டு விட்டது. இப்போது அடுத்த அடி கூட எடுத்து வைக்க முடியாமல், மூச்சுத்திணறியபடி தவித்துக் கொண்டிருந்தது.

அப்போது அங்கு வந்த தோட்டக்காரர் சொன்னார்: கயிறு ரொம்ப நீளமா இருந்தா இதுங்க இப்படித்தான் கண்ணு பண்ணும். சில நேரத்துல உயிருக்கேகூட ஆபத்தாயிடும் என்றபடியே மாட்டை அவிழ்த்துக்கொண்டு போய், கொட்டிலில் கட்டினார். சின்னக் கயிற்றில் கட்டப்பட்டு இருப்பது சிறையல்ல, பாதுகாப்பு என்று சிறுவனுக்குப் புரிந்தது. சில நேரங்களில் அதிகபட்சமான சுதந்திரம் ஆபத்தில் முடிவது உண்டு. சில நியதிகளும், கட்டுப்பாடுகளும் நம்மைக் காத்து கொள்ள ஏற்படுத்தப்பட்டவையே என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்துகொள்ளவேண்டும்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar