|
முதல் பக்கம் »
பக்தி கதைகள் » தொண்டரடிப்பொடியாழ்வார் |
|
பக்தி கதைகள்
|
|
பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். ஆழ்வார்கள் வரிசையில் பத்தாவதாக வைத்து காணப்படும் ஆழ்வார் தொண்டரடிப்பொடியாழ்வார். இவர் பிரபவ வருடம் மார்கழி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் சோழ நாட்டில் திருமண்டங்குடி என்னும் ஊரில் பிறந்தார். ஸ்ரீரங்கநாதரையே புகழ்ந்து பாடுவதே தன் வாழ்வின் இலட்சியமாகக் கொண்டவர். இவருடைய இயர்பெயர் விப்ர நாராயயணர். தான் என்ற எண்ணம் மேலோங்கும் நிலையில் அந்த எண்ணம் வராமல் தன்னை ஒவ்வொரு தொண்டனுக்கும் தான் ஓர் தொண்டன் என்ற எண்ணம் மேலோங்க வேண்டும் என்னும் அடிப்படையில் அரங்கனுடைய தொண்டர்களின் காலடியின் தூசி என்ற பொருள் கொள்ளும்படி தன் பெயரை தொண்டரடிப்பொடியாழ்வார் என்று வழங்கலானார்.
இவர் சிறுவயதிலிருந்தே பகவத் பக்தி கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பூந்தோட்டத்தினை அமைத்து, தினமும் பூக்களை பறித்து எம்பெருமானுக்கு சமர்ப்பிப்பதையே தனது வாழ்நாள் குறிக்கோளாகக் கொண்டவர். இவர் திருமாலிடம் என்றும் பச்சையாக காணப்படும் வைஜெயந்தி மாலையின் அம்சமாக கருதப்படுகிறார். திருமாலை அறியாதார் திருமாலையே அறியாதர் எனும் வழக்கு இவரின் படைப்புகளின் ஒன்றான திருமாலையின் உயர்வை சொல்கிறது. இதன் பொருள் என்னவெனில் தொண்டரடிப் பொடியாழ்வார் இயற்றிய திருமாலை என்ற நூலை அறியாதவர்கள் அந்த எம்பெருமானாகிய திருமாலையே அறியாதவர்கள் ஆவார்கள் என்பதாம். இவர் இயற்றிய இயற்றப்பட்ட திருப்பள்ளியெழுச்சி மார்கழி மாதத்தில் திருமலை உட்பட ஏறக்குறைய எல்லா வைணவ கோயில்களிலும் பாடப்பெற்று வருகிறது. இதனை ஆதாரமாகக் கொண்டு பிரதிவாதி பயங்கரம் அண்ணன் ஸ்வாமி திருமலையானுக்கு சுப்ரபாதத்தினை இயற்றினார். இந்த சுப்ரபாதமே தினமும் திருமலையில் பாடப்படுகிறது. இவ்வாறாக திருமலையானுக்கு தினசரி பாடும் சுப்ரபாதத்திற்கு மூலபுருஷராக புகழப்பட்டார் தொண்டரடிப் பொடியாழ்வார். |
|
|
|
|