|
ஒரு மாந்தோப்பு வழியாக அப்பாவும், மகனும் சென்று கொண்டிருந்தனர். மகன் அப்பாவின் தோளில் அமர்ந்திருந்தான். அவன் தோட்டக்காரனுக்குத் தெரியாமல் இரு மாங்காயை திருடினான். விஷயம் அறிந்த அப்பா மகனின் திறமையை எண்ணி மகிழ்ந்தான். மாங்கா என பட்டப்பெயரில் அழைத்தான். சிறுவன் வளர்ந்து வாலிபப் பருவம் அடைந்தான். அவனோடு சேர்ந்து திருட்டு குணமும் வளர்ந்தது. அரண்மனையில் திருடும் அளவுக்கு துணிந்தான். ஒருநாள் ராணியின் விலை உயர்ந்த வைர மாலை காணாமல் போனது. திருடனைப் பிடிக்க மன்னர் உத்தரவிட்டார். காவலர்கள் காட்டில் ஒளிந்திருந்த மாங்காய் திருடனைப் பிடித்து நகையை மீட்டனர். மன்னர் நடத்திய விசாரணையில் மரண தண்டனை விதித்தார். அவனைக் கொலைக் களத்துக்கு கொண்டு சென்ற வேளையில், அந்தத் திருடனின் பெயரோடு சேர்ந்திருக்கும் மாங்காய் பற்றிய விபரம் கேட்டார் மன்னர். “மன்னா! சிறுவனாக இருந்தபோது, என் அப்பாவின் ஆதரவுடன் மாங்காய் தோட்டக்காரனுக்குத் தெரியாமல் திருடினேன். அன்று முதல் என் அப்பா,மாங்கா என செல்லமாக அழைத்தார். இன்று பெரிய திருடனாகி அதற்கு உரிய விலையாக உயிரையே இழக்கப் போகிறேன்” என அழுதான். அதை கேட்ட அனைவரும், பிள்ளைகளை சரியாக வழிநடத்த வேண்டும் என்ற உண்மையை உணர்ந்தனர். |
|
|
|