|
ஒரு குருநாதருக்கு வயதாகி விட்டதால், அவரால் வேலை செய்ய முடியவில்லை. சீடர்களை அழைத்து,“எனக்கு பிறகு நம் ஆஸ்ரமத்தைக் கவனிக்க தகுதியானவர் யாரோ, அவரை நியமிக்க உள்ளேன். இன்று முதல் உங்களின் ஒவ்வொரு நடவடிக்கையையும் உன்னிப்பாக கவனிப்பேன். சிறந்த ஒருவரை தலைவராக அறிவிப்பேன் என்றார். தலைவராகும் ஆசையில் எல்லா சீடர்களும் கடுமையாக உழைத்தனர். குருநாதரின் தேவையறிந்து நிறைவேற்றினர். ஒரு முடிவுக்கு வந்தவராக குருநாதர் சீடர்களை ஒன்று கூட்டினார். வயதில் இளைய சீடனைக் காட்டி, “இவரே நம் மடத்தின் புதிய தலைவர், என அறிவித்தார். மற்றவர்கள் அதிர்ந்தனர். “குருநாதரே! இவனை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள் என்பது புரியவில்லை. குறிப்பிட்டுச் சொல்லும் விதத்தில் எந்த சாதனையும் இவர் செய்யவில்லையே! என்றனர். அது தான் அவரது நற்குணமே. நீங்கள் பதவிக்காகத் தான் என்னைக் கவனித்தீர்கள். இவரோ எப்போதும் போல இயல்பாக இருந்தார். பதவிக்காக அலையும் பண்பு இவரிடம் இல்லை. என்னிடம் தேவையற்ற நெருக்கத்தை உண்டாக்கிக் கொள்ளவில்லை. அவரது கடமையில் மட்டும் கவனம் செலுத்தியதால் பொறுப்பை ஒப்படைத்தேன். கடமை என்னும் மூன்றெழுத்தே வெற்றி தரும், என்றார் குருநாதர். |
|
|
|