|
ஒருமுறை சோழ மன்னன், புதிய நடராஜர் சிலை ஒன்றை உருவாக்க, தங்கத்தை எடைபோட்டு சிற்பிகளிடம் தந்தான். சிற்பிகள் அதைக் குறுகிய காலத்தில் செய்துதர எவ்வளவோ முயன்றும் சிலை உருப்பெறவில்லை. உடைந்து உடைந்து போனது. அப்பொழுது கருவூர்ச்சித்தர் அங்கே வந்தார். கோயிலுக்குள், அரசன் தந்த தங்கத்துடன் தனியே உள்ளே சென்றார். தங்கத்தை உருக்கி, சிறிதளவு செம்பாம் செந்தூரம் சேர்த்தார். சிலை உருவானது. மன்னன் வந்தான். சிலை கண்ணைப் பறித்தது. அருகில் சென்றான். ஏதோ ஒரு மங்கல ஒளி. செந்தூரம் கலந்தது தெரிந்தது. கருவூராரைச் சிறையில் இட்டான். திருமூலர் வந்தார். மன்னனிடம் வெள்ளி கேட்டார். அதனை உருக்கினார். அதனுடன் செம்பு (செந்தூரம்) கலந்தார். இது சேர்த்தால்தான் ஆண்டவன் சிலை உருவாகும் என்று கூறி, கருவூர்ச்சித்தரை விடுதலை செய்ய வேண்டினார். மன்னா! உன் ஆசை உத்தரவுபடி பகவான் உருவாகமாட்டார். பக்தி என்னும் செம்பு சிறிதாவது வேண்டும். ஆண்டவன் அப்பொழுதுதான் தோன்றுவார் என்றார் திருமூலர். |
|
|
|