|
அரைக்காசு என்ற கூலித்தொழிலாளி இருந்தான். அவன் பெயரில் இருந்த அரைக்காசு கூட அவன் கையில் தங்க மறுத்தது. அந்த அளவுக்கு ஏழ்மை. சகோதரிகளான மூத்ததேவி (மூதேவி) எனப்படும் ஜேஷ்டாதேவியும், லட்சுமியான ஸ்ரீதேவியும் அவனுக்கு அருள் புரியமுடிவெடுத்தனர். ஜேஷ்டாதேவி அவன் முன் தோன்றி மகனே... கவலை வேண்டாம், உனக்கு தேவையான பணம் தருகிறேன் என பொற்காசு குவியலை வழங்கி மறைந்தாள். அரைக்காசு மகிழ்ச்சியில் குதித்தான். து?ங்கிய மனைவி கமலாவை எழுப்பி நடந்ததைச் சொன்னான். காசைப்பத்திரப்படுத்தும் முன், அதை அவள் அளந்து பார்க்க விரும்பினாள். உடனடியாக பக்கத்து வீட்டு விமலாவின் கதவைத் தட்டி, அளக்க நாழி(படி) கேட்டாள். அர்த்த ராத்திரியில் என்ன அளக்கப் போகிறாள் இவள்? என சந்தேகித்த விமலா, ரகசியமாக நாழியின் அடியில்கொஞ்சம் புளியை ஒட்டி விட்டாள். வேகமாக பொற்காசை அளந்த கமலா, இரவோடு இரவாக நாழியை திருப்பிக் கொடுத்தாள்.
அதன் அடிப்பக்கம் பொற்காசு ஒட்டியிருந்ததை கமலா கவனிக்கவில்லை. கமலாவிடம் பொற்காசுகள் இருப்பதை யூகித்த விமலா, அதை அடைய விரும்பினாள்.கமலாவின் வீட்டிற்குள் புகுந்து, திருடினாள். திருடு போனதை அறிந்த அரைக்காசுவும், கமலாவும் திகைத்தனர். வழக்கம் போல, அரைக்காசு கூலி வேலைக்கு சென்றான். வழியில் காட்சியளித்த ஜேஷ்டாதேவியிடம் பொற்காசு திருடு போனதை தெரிவித்தான். வருந்தாதே...இந்த வைர மோதிரத்தை வைத்து பிழைத்துக் கொள், என மீண்டும் உதவினாள்.மோதிரத்தை விரலில் அணிந்த அரைக்காசு, ஆற்றில் நீச்சல் அடித்த வேகத்தில் மோதிரம்நீருக்குள் நழுவியது. தன்னால் உதவ முடியாததை உணர்ந்த ஜேஷ்டாதேவி, தன் தங்கை ஸ்ரீதேவியிடம் விஷயத்தைச் சொன்னாள். நேரில் தோன்றிய ஸ்ரீதேவி, ஒரு பொற்காசினை அரைக்காசுவுக்கு வழங்கி விட்டுக் கிளம்பினாள். அதை விற்ற அரைக்காசு மனைவியுடன் சந்தைக்குப் போனான். சமைக்கத் தேவையான அரிசி, பருப்பு, எண்ணெய், விரால் மீன் என அனைத்தும் வாங்கி வந்தான். கமலா மீனை நறுக்கிய போது, அதன் வயிற்றுக்குள் வைர மோதிரம் ஜொலிப்பதைக் கண்டான். ஆ... பாத்துட்டேன்! பாத்துட்டேன் என மோதிரம் கிடைத்த மகிழ்ச்சியில்அரைக்காசு கத்தினான். அப்போதுதிருடிய பொற்காசுகளை சரி பார்த்துக் கொண்டிருந்த பக்கத்துவீட்டு விமலா பதறிப் போனாள். தன்னுடைய திருட்டுத்தனம் வெளியில் தெரிந்து விடுமே என்ற பயத்தில், பொற்காசுகளை ஒப்படைத்ததோடு மன்னிப்பும் கேட்டாள்.இழந்த பொற்காசுகள் கிடைத்ததும் அரைக்காசு மகிழ்ந்தான். |
|
|
|