|
சுவாமி! கடவுள் மீது பற்று வைத்தால் மற்ற பற்றுகள் எல்லாம் தளர்ந்துவிடும் என்று சொல்கிறீர்களே.... அது எப்படி? என்று குருவிடம் கேட்டான் சீடன். அதனைக் கேட்டு புன்னகைத்த முனிவர், விறகுக்கட்டு ஒன்றை எடுத்து வருமாறு அந்த சீடனிடமே பணித்தார். அந்த சீடனை அழைத்து, இந்த விறகுக் கட்டின் மீது இன்னும் இறுக்கமாக வேறு ஒரு கயிறால் கட்டு! என்றார். அப்படியே செய்தான் சீடன், இப்போது முதலில் கட்டியிருந்த கயிற்றினைப் பார்! என்று சொன்னார் குரு. சீடன் பார்க்க, முதலில் கட்டியிருந்த கயிறு தளர்ந்து இருப்பது தெரிந்தது. இப்படித்தான் கடவுள் மீதான பற்று எனும் கயிற்றினால் இறுகக் கட்டும்போது முதலில் பற்றி இருந்த குடும்பம், பந்தம் என்ற கட்டுகள் தாமாகவே தளர்ந்துவிடும் என்றார் குரு. |
|
|
|