|
ஒரு சமயம் மகான் ஒருவர் தன் சீடர்கள் அனைவருக்கும் விருந்து அளிக்க ஏற்பாடு செய்தார். எல்லோரும் உண்ணத் தொடங்குவதற்கு முன் மகான் அவர்களைப் பார்த்து, நாம் இப்போது மனிதர்களை போல் உண்ணப் போகிறோமா? அல்லது விலங்குகளைப் போல் உண்ணப் போகிறோமா? என்றார். எல்லா சீடர்களும் ஒரே குரலில், மனிதர்களைப் போலத்தான் உண்ணப் போகிறோம் என்றனர். அதற்கு மகான், அப்படியென்றால் அது மிகவும் கெட்டது. ஏனென்றால் விலங்குகள் தங்களுக்குப் போதுமானது கிடைத்தவுடன் சாப்பிடுவதை நிறுத்திவிடும்! என்றார். |
|
|
|