|
பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் ஒருநாள் தமது சீடர்களுடன் உரையாடுகையில், நீங்குள் இப்போது ஓர் ஈயின் உருவத்தைப் பெற்றிருக்கிறீர்கள். உங்கள் முன்பு அமுதம் நிறைந்த ஒரு கோப்பை இருக்கிறது. நீங்கள் இப்போது என்ன செய்வீர்கள்? என்றார். கேள்வியின் உண்மைப் பொருளைப் புரிந்து கொள்ளாத மற்ற மாணவர்கள் மவுனமாக இருக்க, சுவாமி விவேகானந்தர் மட்டும் எழுந்து, நான் அந்தக் கோப்பையின் விளிம்பில் உட்கார்ந்து, கோப்பையிலுள்ள அமுதத்தைப் பருகுவேன். அதே சமயம் அவசரப்பட்டு கோப்பையில் உள்ள அமுதத்தில் விழுந்து உயிரை விடமாட்டேன் என்றார். மெலிதாய் புன்கை புரிந்த ராமகிருஷ்ணர், நீ முற்றிலும் ஒரு விஷயத்தை மறந்து விட்டாய் என்றார். வியப்போடு நோக்கிய விவேகானந்தரிடம் பரமஹம்சர் கூறினார். கோப்பையில் இருப்பதோ அமுதம். அமுதத்தை உண்பவர்களுக்கு மரணமே இல்லை. அப்படியிருக்க, கோப்பையின் விளிம்பில் உட்கார்ந்து அதைப் பருகினால் என்ன? அல்லது அந்த அமுதத்திலேயே விழுந்தால்தான் என்ன? என்றார்.
|
|
|
|