|
இறைவனைக் காண ஆவல்கொண்ட ஒருவன் குருவைத் தேடிச்சென்று தன் ஆசையைக் கூறினான். குரு, உன்னை நீ முதலில் கண்டுகொள். பின்பு இறைவனைக் காண்பாய்! என்றார். என்னை நான் எப்படி அறிவது? என்று கேட்டான். குளத்திற்குச் சென்று உன் உருவத்தைப்பார்! குளத்திற்குச் சென்றபோது எருமைகள் குளத்தில் தண்ணீரைக் கலக்கிக்கொண்டிருந்தன. அவன் தன் உருவத்தை சரியாகப் பார்க்க முடியவில்லை. அதை குருவிடம் சென்று கூறினான். மதியம் சென்று பார்! என்றார் குரு. அவனும் உச்சிவேளையில் குளத்துக்குச் சென்று பார்த்தான். அப்போது எருமைகள் இல்லை. குளத்து நீர் தெள்ளத் தெளிவாக இருந்தது. அவன் உருவத்தை நன்றாகப் பார்க்க முடிந்தது. அதை குருவிடம் கூறினான். அதற்கு குரு, உனது உள்ளம், காலையில் நீ பார்த்த குளம் போல் கலங்கியிருந்தது. அதனால் அதில் உன்னை நீ பார்க்க முடியவில்லை. மதியம் பார்த்த குளம் போல உள்ளத்தை நீ வைத்திருந்தால் அதில் உன்னையும் பார்க்கலாம். இறைவனையும் பார்க்கலாம்! என்றார். |
|
|
|