|
மகரிஷிகள் அனைவரும் ஒரு சபையில் கூடியிருந்தனர். பல கல்ப காலம் வாழ்வது உட்பட பல சந்தேகங்களையும் கேட்டு பதில் பெற விரும்பினர் முனிவர்கள். பல கல்ப காலம் வாழ்ந்த மார்க்கண்டயே மகரிஷி சபைக்கு எழுந்தருளினார். எல்லோரும் அவரை நமஸ்கரித்தனர். முனிவர்களின் உள் மனம் அறிந்த மார்க்கண்டேயர், எழுந்து, வசிஷ்டமகிரிஷியின் அருகில் வீற்றிருந்த ஏழு வயது பராசரை விழுந்து நமஸ்கரித்தார். முனிவர்களுக்கு வியப்பு. பராசர் பயந்தே விட்டார். பராசரே! நீர் எழுவயதுக்காரர் என்றாலும், ஒரு நிமிடம் கூட மகாவிஷ்ணுவின் நாமாவைச் சொல்லத் தவறவேயில்லை. எவர் ஒருவர் விஷ்ணுவின் நாமாவைச் சொல்கிறாரோ அவரே வயதில் மூத்தவர் ஏழுகல்பகாலம் வாழ்ந்தாலும் நான் அப்படிச் செய்யவில்லை. எனவே நீயே வணங்கத்தக்க பெரியவன்! என்று மார்க்கண்டயேர், கூறவும், முனிவர்களின் சந்தேகம் தெளிந்தது. |
|
|
|