|
ஒரு பஞ்ச காலத்தில் அந்தணர் ஒருவரது வீட்டில் அரிசி கூட இல்லை. பசி தாங்காத அவர், யாரும் அறியாமல் அரண்மனைக்குள் நுழைந்து நவரத்தினம், தங்க நகைககளை ஒரு துணியில் முடிந்து கொண்டு புறப்பட்டார். அப்போது, இது தவறு என மனதுக்குப் படவே, நகையைக் கீழே போட்டு விட்டு, வேறொரு அறைக்குள் நுழைந்தார். அங்கு அரிசி, பலசரக்குகள் குவிந்து கிடந்தன. அதில் ஒரு பகுதியை எடுத்தார். அப்போதும் மனதிற்குள்,வேதம் கற்றவன் திருடி உண்பதை விட, உயிரை விடுவது மேல் என்ற எண்ணம் உண்டானது. அங்கிருந்து நகர்ந்த போது, காவலர்களிடம் சிக்கிக் கொண்டார். மன்னருக்கு, அவரது வறுமை புரிந்தது. நேர்மையை அறிந்த மன்னர், அவர் தலைமையில்மழைக்காக யாகம் நடத்த உத்தரவிட்டதோடு நிறைய சன்மானம் அளித்தார். |
|
|
|