|
லிகிதர் என்ற முனிவர், சங்கர் என்ற முனிவரின் ஆசிரமத்தில், அனுமதி இன்றி மாம்பழம் பறித்து சாப்பிட்டார். அந்நாட்டு மன்னரிடம் இது பற்றி சங்கர் புகார் செய்தார். சிறு விஷயத்துக்காக லிகிதரை தண்டிக்க மன்னருக்கு மனமில்லை. ஆனால் தவறை ஒப்புக்கொண்ட லிகிதர், மன்னா! சட்டத்தின் முன் அனைவரும் சமம். பொருள் சிறிதாயினும் திருடுவது குற்றம். திருடிய கைகளைத் துண்டிக்கும்படி உத்தரவிடுங்கள் என்றார். தண்டிக்கும் மன்னனுக்கு, மன்னிக்கவும் அதிகாரம் உண்டு என மறுத்தார் மன்னர். உடனே லிகிதர், திருடிய கைகளை இழப்பது தான் சரி என்று சொல்லி, தானே கைகளை வெட்டிக் கொண்டார். இதைக்கண்ட சங்கருக்கு மனம் பொறுக்கவில்லை. ஒரு புனித நதியில், அவரை நீராடும்படி கூறினார். நீரில் மூழ்கி எழுந்ததும் கைகள் வந்துவிட்டன. இதுகண்ட லிகிதர், இவ்வளவு இரக்க குணம் கொண்ட நீங்கள் மன்னரிடம் ஏன் முறையிட்டீர்கள்? எனக் கேட்டார். பொருள் சிறிதாயினும், அதற்குரியவரின் அனுமதிஇன்றி அதை எடுப்பது தவறு என்பதை உலகம் புரிந்து கொள்ளவே இப்படி செய்தேன், என்றார்.
|
|
|
|