|
இரண்டு திருடர்கள் ஒரு பெரிய வரை வழிமறித்து, அவரிடம் இருந்த பணத்தைக் கேட்டனர். பெரி ய வ ரிடம் பணம் ஏதும் இல்லை. பணம் இல்லாமல் ஏனடா வெளியே வந்தாய்? என்று கேட்டு தகராறு செய்தனர். அவரது கைகளை வெட்டி கிணற் றுக்குள் போட்டு விட்டு போய் விட்டனர். அவ்வழியாக வந்த ஒருவன் தண்ணீர் குடிக்க கிணற் றுப் பக்கம் வந்தான். உள்ளே தவித்துக் கொண் டி ருந்த பெரி ய வரை மீட்டு வைத் தி ய ரிடம் அழைத்துச் சென்றான். ஒரு வழி யாக காயம் குணமானது. பின் அந்தப் பெரியவர் ஒரு அரசனிடம் வேலைக்குச் சேர்ந்தார். அவரது நேர்மையை அறிந்த மன்னன், அவரிடம் தான தர்மம் செய்யும் துறையை ஒப்படைத்து அமைச்சராக்கினான். பெரியவர் தானத்தின் அவசியத்தை மன்னனுக்கு எடுத்துச் சொல்லி, வருமா னத்தில் பாதியை தானத்துக்கென ஒதுக்க வைத்தார். நிதி அதிகமாக இருந்ததால், தானம் கேட்டு வரும்ஏழைகளுக்கு சற்று அதிகமாகவே நிதி கொடுத்து, அவர்களை தொழில் துவங்கச் செய்தார் பெரியவர். எனவே நாட்டின் பொருளாதாரம் உயர்ந்தது. அரசுக்கு தொழிற் கூ டங்கள் மூலம் வரும் வரியும் அதிகரிக்கவே தான நிதியும் கூடியது. 24 மணி நேரமும் அன்னதானக் கூடம் செயல் பட் டது. இவ்வூரில் கிடைக்கும் தானத்தைப் பற்றி, பெரியவரின் கையை வெட்டிய திருடர்கள் கேள்விப் பட்டனர். தங்களால் வெட்டப் பட்டவர் தான் மந்திரியாக இருக்கிறார் என்ற விஷயம் தெரி யாமல் வந்த அவர்கள், அரண்மனைக்கு வந்தவுடன், பெரியவர் இருப்பதைப் பார்த்தனர்.
அங்கிருந்து நழுவ முயன்றனர். இதைக் கவனித்த பெரியவர், அவர்களை வெளியே போக வி டாமல் தன்னிடம் அழைத்து வரச் சொன்னார். கேள்வி ஏதும் கேட்காமல் அவர்களுக்கு வேண்டியதைக் கொடுத்தார். ஊர் எல்லை வரை இரண்டு வீரர்களையும் பாதுகாப் புக்கு அனுப்பி வைத்தார். அந்த வீரர்கள் அவர்களிடம், உங்களுக்கு மட்டும் அமைச்சர் நிறைய பொருள் தந்தாரே! என்ன விசேஷ காரணம்? என் றதும், அவர் எங்கள் சொந்தக்காரர், என்று அவர்கள் பொய் கூறினர். இதை பொறுத்துக் கொள்ளாத பூமி மாதா வெடித்தாள். அவர்களை அப்படியே விழுங்கி விட்டாள். இதை காவலர்கள் மூலம் கேள்விப்பட்ட பெரியவர் வருத்தப் பட்டார். ராம பிரானிடம், நீ உன் மனைவியையே கடத்திய ராவணனுக்கு முக்தி கொடுத்தாய். அதுபோல் என் கைகளை வெட் டிய இந்த திருடர்களுக்கும் முக்தி கொடு. மேலும், நான் கொடுத்த பொருளுடன் அவர்களை பூமியில் திருந்தி வாழச்செய், என்று மனமுருகி பிரார்த்தித்தார். இதையடுத்து பூமித்தாய் அவர்களை விடு வித்தாள். திருடக் கூடாது... துன்பம் செய்தவர்க்கும் நன்மையே செய்ய வேண்டும் என்ற போதனைகளை இந்தக் கதை உணர்த்துகிறது. |
|
|
|