|
இளந்துறவி ஒருவரின் அழகில் மயங்கிய தாசி ஒருத்தி, அவரை திருமணம் செய்ய விரும்பினாள். ஒருநாள் பிச்சைக்கு வந்த அவரிடம் தன் காதலை வெளிப்படுத்தினாள். ஆனால், துறவி அதை ஏற்கவில்லை. கோபத்தில் நீயெல்லாம் ஒரு ஆம்பிளையா.... இல்லை... என்னைப் போல பெண்ணா? என கேட் டாள். துறவி கோபிக்கவில்லை. தக்க நேரத்தில் பதில் சொல் வேன் என்று சொல்லிவிட்டு போய்விட்டார். ஓரிரு ஆண்டுகள் கடந்தன. ஒருநாள் துறவி, தாசியின் வீட் டுக்கு ஆள் அனுப்பினார். வந்தவர், அம்மா! உங்களை துறவி உடனே அழைத்து வரச் சொன்னார் என்றார். மகிழ்ச்சியுடன் தாசி, துறவியின் குடிசைக்கு விரைந்தாள். அங்கு அவர் சாகும் நிலையில் கிடந்தார். என்னை ஆணா... இல்லை பெண்ணா? என கேட்டாய். விடை கொடுக்கும் காலம் நெருங்கி விட்டது. நிச்சயமாக நான் ஆண் தான், என்றார். தாசி, இந்த விடையைச் சொல்லவா... இவ்வளவு காலம் தேவைப்பட்டது எனக் கேட்டாள். துறவி தழுதழுத்த குரலில், ஆசையை வென்று மனதை ஆள்பவனே ஆண். உயிருக்கு விடை கொடுக்கும் நேரம் நெருங் கி விட்டதால், உனக்கும் விடை கொடுத்தேன் என்றார். மனம் திருந்திய தாசி துறவியை வணங்கினாள். |
|
|
|