|
ஒரு மன்னன் இன்னொரு நாட்டின் மீது படையெடுத்தான். வழியில் ஒரு காட்டைக் கடக்க வேண்டியிருந்தது. அங்கிருந்த துறவியிடம், தனது வெற்றிக்காக ஆசி பெறச் சென்றான். பனிக் காலம் என்பதால் குளிர் மிகவும் அதிகமாக இருந்தது. துறவி வேட்டி உடுத்தி தியானத்தில் இருந்தார். அவருக்கு மன்னன் தன் அங்க வஸ்திரத்தை போர்த்தி விட்டான். கண் விழித்த துறவியிடம், தனக்கு போரில் வெற்றி கிடைக்க ஆசி தர வேண்டும் என்றான். துறவி அவனுக்கு ஆசி தராமல், மன்னா! நீ போர்த்திய வஸ்திரம் எனக்கு தேவையில்லை. ஏனெனில் எதன் மீதும் எனக்கு ஆசை இல்லை, என்றார். என்னிடம் இது போல் பல வஸ்திரங்கள் உள்ளன. ஒன்றை மட்டும் ஏற்றுக் கொள் வ தில் என்ன தயக்கம்!என்றான் மன்னன். மகனே! உன் வசம் ஒரு நாடு இருக்கிறது. ஆனாலும், இன்னொரு நாட்டின் மீது இப்போது படையெடுக்கிறாய். அப்படியானால், உனக்குத் தானே தேவை அதிகமாக உள்ளது. ஆசை உள்ளவனுக் கே மேலும் மேலும் பொருள் தேவை என்றார் துறவி. இந்த விளக்கம் கேட்ட மன்னன், படையெடுப்பதை கைவிட்டு நாடு புறப்பட்டான். துறவியும் ஆசியளித்தார். |
|
|
|