|
ஒரு சமயம் கிரகங்களின் சஞ்சாரத்தால் சிவன், பார்வதியை விட்டு பிரிய நேர்ந்தது. இதை அறிந்த ஆடி என்னும் அரக்கன், சிவனின் அழகில் மயங்கி அவரை அடைய விரும்பினான். ஒரு ஆண், இன்னொரு ஆணை அடைய முடியாது என்பதால், பார்வதி போல உருவத்தை மாற்றிக் கொண்டு காதல் மொழிபேசினான். தன்னை நெருங்குவது பார்வதி அல்ல என்பதை உணர்ந்த சிவன், திரிசூலத்தை அரக்கன் மீது ஏவினார். அது அரக்கனின் மார்பில் குத்தி உயிரைக் குடித்தது. தன்னுடைய வடிவத்தில் அரக்கன் வந்ததால், அவன் மீது இரக்கம் கொண்ட பார்வதி அவனுக்கு நற்கதி வழங்கினாள். அரக்கனின் பெயரால் ஆடி என ஒரு மாதத்திற்கு பெயரிட்டதோடு, அந்த மாதத்தில் தன்னை வழிபடுவோருக்கு யோக பலன்களை வாரி வழங்கினாள். இதன் அடிப்படையில் ஆடி முழுவதும் அம்மன் கோயில்களில் வழிபாடு நடக்கிறது. |
|
|
|