|
வியாபாரி ஒருவரின் பணப்பை காணாமல் போனது. கண்டுபிடிப்போருக்கு பணப்பரிசு தருவதாக அறிவித்தார். கந்தன் என்ற இளைஞன் ஒருவன் பரிசுக்காக தேட முயன்றான். காளி அம்மனுக்கு காணிக்கை தருவதாகவும் வேண்டினான். அவனது நம்பிக்கை வீண் போகவில்லை. பணப்பையை ஒரு புதரில் இருந்து எடுத்து வியாபாரியிடம் ஒப்படைத்தான். ஆனால் பணத்தாசை பிடித்த வியாபாரி பரிசு தர விரும்பவில்லை. பணத்தோட தங்க மோதிரம் ஒண்ணும் இருந்துச்சு. அதைக் காணலையே... அதையும் கொடு. அப்புறம் தான் பரிசு தருவேன் என்றார் வியாபாரி. கந்தன் வருந்தினான். அங்கு வந்த ஊர்த்தலைவர், வியாபாரியின் தந்திரத்தை புரிந்து கொண்டார். மிகவும் சமயோசிதமாக, பணத்தோடு மோதிரம் இருந்ததாக நீங்க சொல்றதால், இது உங்களுடையது இல்லைன்னு தெரியுது. எனவே இதை ஊர் பொதுப்பணமாகக் கருதி, பத்தில் ஒரு பங்கு அம்மனுக்கு காணிக்கை தந்து விட்டு மீதிப்பணம் கந்தனுக்கே என தீர்ப்பு கூறினார் தலைவர். |
|
|
|