|
மகாபாரத போரில், கிருஷ்ணரின் உதவி நாடி பாண்டவர்களில் ஒருவனான அர்ஜூனனும், கவுரவர் தலைவன் துரியோதனனும் வந்தனர். கிருஷ்ணர் அவர்களிடம், ஆயுதமின்றி நான் ஒரு பக்கம் நிற்பேன். இன்னொரு பக்கம் என் படைகள் நிற்கும். எது வேண்டும் என்பதை அர்ஜூனன் முதலில் தெரிவிக்கலாம் என்றார். கிருஷ்ணா! உன் துணை கிடைத்தால் போதும் என்றான் அர்ஜூனன். துரியோதனன் அவனிடம் அர்ஜூனன் உன் துணையை மட்டும் கேட்டதால், உன் படைகள் என் பக்கம் தானே என சொல்லி மகிழ்ச்சியுடன் புறப்பட்டான். அதன் பின் கிருஷ்ணர் அர்ஜூனா! வாய்ப்பு கிடைத்தும் ஆயுதம் இல்லாத என்னை மட்டும் ஏன் விரும்புகிறாய்? என்றார். கிருஷ்ணா! பரமாத்மாவான உன் துணையின்றி, எத்தனை ஆயிரம் படைகள் இருந்து என்ன பயன்? அதனால் நான் உன் துணையைக் கேட்டேன் என்றான் அர்ஜூனன். இதன்படியே போரிலும் பாண்டவர்களே வெற்றி பெற்றனர். |
|
|
|