|
ராமகிருஷ்ண பரமஹம்சரைக் காண வந்த பக்தர் ஒருவர் அவரிடம் கடவுளுக்கு உருவம் உண்டா? என்று கேட்டார். அதற்கு ராமகிருஷ்ணர், கடவுள் உருவம் உடையவர், உருவம் இல்லாதவர் இரண்டும்தான் என்று பதில் அளித்தார். அது எப்படி? புரியவில்லையே! என்று வினா எழுப்பினார் பக்தர். பனிக்கட்டியும், தண்ணீரும் போல! என்று பகவான் சொன்னதும், பக்தருக்குப் புரிந்தது.
|
|
|
|